அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொருளாளரும், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினரு மான பி.வெற்றிவேல் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் என்னும் அதிர்ச்சிச் செய்தி அறிந்து வருந்துகிறோம்.
சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும், பின்னர் இருமுறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றிய அவரது மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
16.10.2020
No comments:
Post a Comment