பா.ஜ.க.விடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு கட்சி மாறிய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது ஊழல் வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 20, 2020

பா.ஜ.க.விடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு கட்சி மாறிய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது ஊழல் வழக்கு

அகமதாபாத் அக் 20 குஜராத் காங்கிரஸ் கட்சி தலைவர் அபிஷேக் மனு சிங்வி,  சட்டமன்ற உறுப்பினர் சிலர் பாஜகவிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு தங்களது சட்டமன்ற பதவியிலிருந்து விலகினர்.இந்த  அய்ந்து உறுப்பினர்கள்  மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து இந்தச் வழக்கை விசாரிக் குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


குஜராத்தில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட் சியை சார்ந்த சட்டமன்ற உறுப் பினர்களான அக்ஷய்பட்டேல் மற்றும் கங்காரியா ஆகியோர் பாஜகவிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் அவர்கள் பேசிய பதிவு இருப்பதாகவும்,அதில் ஏற்கெனவே பதவி விலகியஅய்ந்து பேர்  பாஜகவிடம் பணம் வாங்கி உள்ளதற்கான சான்றும் உள்ளது என்றும் அபிஷேக் மனு சிங்வி குற்றம்சாட்டியுள்ளார்.


பதவி விலகிய அய்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களையும் தற் போது பாரதிய ஜனதா கட்சி குஜராத் இடைத் தேர்தல்களில் களமிறக்கி உள்ளது.


ஆகையால் இதற்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இந்த ஊழலில் ஈடுபட்ட அனைவரிடமும் தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது குறைந்தபட்சம் உயர்நீதி மன்ற நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் நேற்று (19.10.2020) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அபி ஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment