ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி: கனிமொழி எம்.பி., மீது அய்ந்து பிரிவுகளின்கீழ் வழக்கா,  திரும்பப் பெறுக! கழகத் தலைவர் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 6, 2020

ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி: கனிமொழி எம்.பி., மீது அய்ந்து பிரிவுகளின்கீழ் வழக்கா,  திரும்பப் பெறுக! கழகத் தலைவர் அறிக்கை

ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி: கனிமொழி எம்.பி., மீது அய்ந்து பிரிவுகளின்கீழ் வழக்கா?  திரும்பப் பெறுக! கழகத் தலைவர் அறிக்கை


உ.பி.யில் தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த பெண் பாலியல் வன் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல் லப்பட்டதற்கு நீதி கோரி, சென்னை சின்னமலை, ராஜீவ் காந்தி சிலை அரு கிலிருந்து திமுக மகளிர் அணியின் பேரணி கனிமொழி எம்.பி. தலைமை யில் ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றது.


பேரணியில் பங்கேற்ற பல்லாயி ரக்கணக்கான பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். திமுக எம்.பி. கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. சட்ட விரோதமாக கூடுதல்,  பொது அமைதிக்குக் குந்தகம் விளை வித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அனை வரும் விடுதலை செய்யப்பட்டனர்.


கனிமொழி எம்.பி. உள்ளிட்ட வர்களின் கைதைக் கண்டித்து திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (5.10.2020) மாலை விடுத்துள்ள அறிக்கை வருமாறு,


உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் மணியை ஜாதி ஆதிக்க மனப் பான்மையுடன் பாலின வன்கொடுமை யைக் கட்டவிழ்த்துவிட்டு கொலை செய்ததுடன், அவரது சடலத்தைக் கூட அவரது பெற்றோர்களுக்குக் கூட காட்டாமல் நடு நிசியில் பெட்ரோல் ஊற்றி வயல்வெளியில் உ.பி. காவல் துறையே எரித்த கொடுமையைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட அந்த ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்ணின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றவர்கள் உ.பி. காவலர்கள் மிக மோசமாக, கீழே தள்ளியும், காங்கிரஸ் தொண்டர்களைத் தடியில் அடித்தும், அடுத்த நாள் சென்ற மேற்கு வங்க எம்.பி.க்களிடமும் ஆண் பெண் என்ற வேறுபாடு, நாகரிகம் பார்க்காமல் மிகவும் மூர்க்கத்தனமாய் நடந்து கொண்டதைக் கண்டித்தும், இன்று 5.10.2020 மாலை ஆளுநர் மாளி கையை நோக்கி மெழுகுவத்தி ஏந்தி பேரணியாகச் சென்ற தி.மு.க. எம்.பி. யும், மகளிர் அணிச் செயலாளருமான கவிஞர் கனிமொழி எம்.பி. அவர்களை யும் உடன் சென்ற பொறுப்பாளர்களைக் கைது செய்து, ஆளுநரிடம் அந்த மனுவைக் கூட கொடுக்க தமிழக அரசு அனுமதிக்காததும், அவரைக் கைது செய்ததும் மிகவும் வன்மையாக கண் டனத்திற்கும் உரியதாகும். அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கினை திரும்பப் பெறவேண்டும் என்றும் வலி யுறுத்துகிறோம்.


உத்தரப்பிரதேச அரசின் காவல் துறை காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதைக் கண்டித்து- பாலியல் நீதி கேட்டு ஆளுநரிடம் மகளிர் பேரணி நடத்துவதைத் தடுத்து கைது செய் திருப்பது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பது ஆகும். உடனடியாக அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என திராவிடர் கழகம் வற்புறுத்துகிறது!


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment