ஒரே மாதத்தில் இரண்டு முறை தோன்றுவதாலே நீலவண்ண நிலவு என்று பெயர் பெற்றது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

ஒரே மாதத்தில் இரண்டு முறை தோன்றுவதாலே நீலவண்ண நிலவு என்று பெயர் பெற்றது

சென்னை அக் 31 நீலவண்ண நிலவு  இன்று இரவு (31.10.2020)தோன்ற உள்ளதாக செய்திகள் வருகிறது.   இதற்கு நிலவு நீல நிறத்தில் இருக்கும் எனப் பொருள் இல்லை.  ஒரே மாதத்தில் இரு முழு நிலவு தென்படும் போது இரண்டாவதாகத் தோன்றும் முழு நிலவுக்கு புளூ மூன் எனப் பெயராகும்.  இந்த மாதம் 1 ஆம் தேதி முழு நிலவு தோன்றி நாளை மாத முடிவில் மீண்டும் முழு நிலவு தெரிய உள்ளது.


முழு நிலவு தோன்றும் பவுர்ணமி மற்றும் நிலவே தெரியாத அமாவாசை ஆகியவை மாதம் ஒரு முறை நிகழும்.  ஒரே மாதத்தில் இருமுறை முழு நிலவு தென்படும் பவுர்ணமி வருவது ஆச்சரிய மான நிகழ்வாகும்   அது தற்போது நடக்கும் மாதத்தில் நிகழ்கிறது.  இதற்கு முன்பு 2007 ஆம் வருடம் ஜூன் 30 ஆம் தேதி புளூமூன் தோன்றியது.


அடுத்த புளூமூன் நிகழ்வு வரும் 2050 ஆம் வருடம் செப்டம்பர் 30ல் நிகழ உள்ளது. 


ஆகவே இத்தகைய புளூமூனை மீண்டும் காண மக்கள் இன்னும் 30 வருடம் காத்திருக்க நேரிடும்.  இந்த நிகழ்வின் போது நிலவில் எவ்வித மாறுபாடும் இருக்காது.   


No comments:

Post a Comment