அனுஜ் குமார்
(உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராசில் ஓர் இளம் பெண் தாக்கப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்ச்சியை அடுத்து அவளது உடல் அவசரம் அவசரமாக அவளது குடும்பத்தின ருக்குக் கூட தெரியாமல் அரசு அதிகாரிகளால் எரிக்கப்பட்டது நாடு முழுவதிலும் ஒரு பெருங் கோபத்தை உருவாக்கி யுள்ளது. அடிக்கடி வன்முறைச் செயல்களுக்கு வழி கோலும் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டப் படுவது நிலவி வருவதை சுட்டிக் காட்டும் ஒரு பயங் கரமான வழக்கைப் பற்றிய செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.)
உத்தரப்பிரதேச மாநில ஹத்ராஸ் கிராமத்தில் 19 வயதுப் பெண் தாக்கப்பட்டு, பாலியல் வன் கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டது பற்றி அந்தப் பெண்ணின் மாமா தனது சோகம் நிறைந்த குரலில் தங்களின் குடும்பத்தின் பெருமை பற்றி மிகவும் பிரியமாகப் பேசினார். அந்த இளம் பெண் எவ்வாறு பாரம்பரிய பெருமையுடன் நடந்து கொண்டாள் என்றும், முறை யான கல்வி அறிவு அதிகமாக இல்லாத போதிலும் அவள் குடும்பப் பிரச்சினைகளில் அறிவு பூர்வமான ஆலோசனைகளை வழங்குவாள் என்றும் அவர் பேசினார். வீட்டு வேலைகளையும் அவள் மிகவும் நன்றாகவே செய்து வந்தாள் என்று அவளது தாய் கூறினார். அவளது நற்பண்புகளை ஒன்று திராட்டி ‘சூப்பர் ஸ்டார்‘ என்ற ஒரே ஒரு சொல்லில் அவளைப் பற்றி அவளது மாமா கூறினார்.
உடல் எரிப்பு
கடந்த செப்டம்பர் 14 அன்று மிருகத்தனமாகத் தாக்கப்பட்ட அந்தப் பெண் அலிகார் ஜே.என். மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிறகு, செப்டம்பர் 29 அன்று புதுடில்லி சப்தர்ஜங் மருத்துவ மனையில் தனது உயிரை இழந்தாள். அவளது மரணமும், மாவட்ட நிர்வாகத்தி னரால் செப்டம்பர் 30 அன்று பின்னிரவில் அவளது உடலை மிக அவசரம் அவசரமாக எரித்த நிகழ்ச்சியும் இந்தியா முழுவதிலும் ஒரு பெரிய எதிர்ப்புக் கூக்குர லையும், சில இடங்களில் போராட்டங்களையும் எழுப்பி யது. தங்களது மகளின் உடலை எரிப்பதற்கு முன், அரசு அதிகாரிகள் அவ ளது குடும்பத்தினரின் அனுமதியைப் பெறவில்லை என்ற குடும்பத்தினரின் குற்றச்சாட்டை நிருவாகம் மறுக்கிறது. ஓர் அரசியல் போட்டிக்கு வழி வகுத்த இந்த கொடூரமான நிகழ்வு அம்மாநிலத்திலும், நாட்டி லும் உள்ள பெண்களின் பரிதவிப்பையும், தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஜாதி பாகுபாட் டையும், நிருவாகத்தின் குறைபாடுகளையும் தெளிவாக எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றன.
பாகுபாடு காட்டப்படுவது பற்றிய ஒரு கதை
புதுடில்லியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தின் அருகில் உள்ள பூலாகரி கிராம வயல்வெளியில் இந்த பயங்கரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி என்னும் இந்தக் கதை, ஜாதி பாகுபாடு காட்டப்படுவதில் தொடங் கியது என்று அவளது குடும்பத்தினர் கூறுகின்றனர். தாழ்த்தப்பட்ட வால்மீகி ஜாதியைச் சேர்ந்த பெரும் பாலான இளம் பெண்களைப் போல, இந்த இளம் பெண்ணும் துவக்கப் பள்ளிக்கு மேல் பள்ளிக் கல்வி பெற்றிருக்கவில்லை என்று அவளது தந்தை ராம்லால் கூறுகிறார்: எங்களது பெண்கள் வயல் வெளிக ளுக்கு இழுத்துச் செல்லப்பட்டு விடுவார்கள் என்ற அச்சத்தி லேயே நாங்கள் எப்போதுமே வாழ்ந்து வந்துள்ளோம் என்று அவர் கூறினார். அந்தக் குடும்பம் வசித்து வந்த வீட்டில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில்தான் அந்த வயல்வெளிகள் இருந்தன. தென்றலில் மெல்ல அசைந் தாடும் நீண்ட மில்லட் கதிர்கள், தங்கள் மகள் எத்தகைய கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டாள் என்பதை நினை வூட்டி அந்தக் குடும்பத்தினரை அச் சுறுத்துவது போலவே தெரிகின்றன.
மரண வாக்குமூலம்
அந்தப் பெண் பெரும்பாலும் வீட்டிற்கு உள்ளே இருப்பதை விரும்புவாள் என்று அவளது மாமா குறிப்பிட்டார். தனது மரண வாக்கு மூலத்தில் அந்தப் பெண், குற்றம் சாட்டப்பட்டவர்களில், செல்வாக்கும் ஆதிக்க உணர்வும் கொண்ட தாகூர் சமூகத்தைச் சேர்ந்த சந்தீப் மற்றும் ரவி என்ற இருவர், இதற்கு முன்னர் ஒரு முறை தன்னைத் தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளனர் என்று கூறியிருக்கிறாள். தனது பெற் றோரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்று எண்ணி தான் அது பற்றி எவரிடமும் கூறாமல் போனதாக அவள் குறிப்பிட்டுள்ளாள். நாங்கள் இரண்டு முறை தண்டிக்கப்பட்டுள்ளோம் என்று நொய்டாவில் ஒரு சோதனைச் சாலையில் உதவியாளராகப் பணி யாற்றும் அந்தப் பெண்ணின் இளைய சகோதரன் ராகேஷ் கூறினான்: ஒரு முறை எனது சகோதரி தாகூர் பையன்களால் கொல்லப் பட்டும், மற்றொரு முறை நள்ளிரவில் நிருவாகம் அவளது உடலை எரித்தும் நாங் கள் தண்டிக்கப்பட்டுள்ளோம். நான் விரும்பியதெல்லாம், விடியும் வரை காத்திருந்து, அவளது இறுதி ஊர்வலத் துக்காக புதிய துணிகளால் அவளது உடலை அலங் கரிக்க வேண்டும் என்பதுதான். இறந்தவளின் முகத்தை இறுதியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அனுமதிக்க அவர்கள் மறுத்துவிட்டனர் என்று அவர் கள் கூறுகின்றனர். கிராமமே ஒரு காவல்துறைக் கோட் டையாக மாற்றப் பட்டுவிட்டது. அன்றிரவு தங்களது வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு முயல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டனர் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். உடலை எரிப்பதற்கு எந்த பொருள்களை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பதும் தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறினர்.
ராமலாலிடம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றும், இரண்டு எருமை மாடுகளும், ஒரு பிகாஸ் ஒதுக்கப்பட்ட விவசாய நிலமும் இருந்தன. அந்த கிராமத்தில் இருந்த மற்றும் பலரை விட அவர் வைத்திருந்தது அதிகமானது தான். அருகில் உள்ள பள்ளியில் ஒரு பகுதிநேர துப்புர வுத் தொழிலாளியாகவும் அவர் பணியாற்றி வந்தார். அவரது மூத்த மகன் ராஜேஷ் கிராமத்திலேயே தங்கியிருந்தான். தவறாமல் வந்து கொண்டிருந்த வருவாய் அந்தக் குடும்பம் வறுமையில் விழுந்துவிடாமல் காப் பாற்றி வந்தது.
பார்ப்பன ஆதிக்கத்தில் கிராமம்
தாகூர் மற்றும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்த அந்த கிராமத்தில் இருந்த நான்கு வால்மீகி வீடு களில் ராம்லாலின் வீடும் ஒன்று. ராம் லால் குடும்பத் திற்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களுக் கும் இடையே இருந்து வந்த பழைய பகைமையைப் பற்றி கேமாசிங் சவுஹான்என்பவர் கூறினார். இந்த இளம் பெண்ணின் தாத்தாவை ஓர் அரிவாளால் தாக் கிய குற்றத்துக்காக சந்தீப்பின் தந்தை 2001 ஆம் ஆண் டில் சிறிது காலம் நீதிமன்றக் காவலில் இருந்தாராம். டில்லியில் ஒரு சுகாதாரப் பணியாளராக வேலை செய்யும் சவுஹான் அந்தப் பெண்ணின் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். 90களின் பிற் பகுதியில் நான் இந்த கிராமத்துக்கு வந்த போது, நாங்கள் கொடுக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளும் முன் அதன் மீது தண்ணீர் தெளிக்கும் பழக்கத்தைப் பின்பற்றி வந்ததை நான் கண்டிருக்கிறேன். அப்போதிருந்த நிலை இப்போதும் கூட பெரிய அளவில் மாற்றம் அடைந்து விடவில்லை. அவர்கள் எங்களை இன்னமும் விலங்கு களாகவே கருதி நடத்துகின்றனர்என்று அவர் கூறினார்.
வயல்வெளியில் தாக்குதல்
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் காயத்திரிக்கு எவராலும் ஆறுதல் கூறவும் முடியவில்லை. ஆனால், ஊடகத்தினரிடம் பேசுவதில் அவர் சோர்வடைந்து போய்விடவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பற்றி அவர் நினைவு கூர்ந்து பேசிய போது அன்று காலை நடந் தேறிய கொடுமை வெளிவந்தது. செப்டம்பர் 14 அன்று காலை 9 மணி அளவில், தனது மகள் மற்றும் மூத்த மகன் ராஜேஷூடன் புல் வெட்டுவதற்காக காயத்திரி சென்றார். சிறிது நேரம் கழித்து, கால்நடைகளுக்கு தீனி போடுவதற்காக ராஜேஷ் வீட்டுக்குத் திரும்பி வந்து சேமித்து வைக்கப்பட்டிருந்த புல்லினை ஒன்று திரட்டி கால்நடைகளுக்கு அளித்தான். தாயும் மகளும் வயல் வெளியிலேயே இருந்தனர்.
சிறிது நேரம் கழித்து காயத்திரியால், வயலில் மேலும் சிறிது தூரத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனது மகளைக் காண முடியவில்லை. பலமுறை அவளை பெயரிட்டு காயத்திரி அழைத்தார். மகளிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால், அன்றைய தினம் வெப்ப மிகுதியால் தாகத்திற்குத் தண்ணீர் குடிப்பதற்கு வீட்டிற்கு சென்றிருக்கக் கூடும் என்று கருதிய காயத்ரி வீட்டுக்குத் திரும்பினார். அப்படி திரும்பி வரும்போது வயல்வெளியில் தனது மகளின் செருப்பு ஒன்று தலை கீழாக இருந்ததைக் கண்ட காயத்ரி, அவள் உதவி கேட்டு கூச்சல் போட்டிருக்கலாம்; ஆனால் எனக்குதான் காது சரியாகக் கேட்காமல் இருந்தது என்று கூறினார். இன்னமும் சிறிது தொலைவு சென்ற பிறகு, பெண்ணின் மற்றொரு காலணியையும், யாரோ ஒருவர் வயல் வெளிக்குள் இழுத்துச் செல்லப்பட்டதற்கான அடையா ளங்களையும் காயத்ரி கண்டார். வயல்வெளியில் பயிர்க் கதிர்கள் அடர்த்தியாவும், சில நேரங்களில் ஒரு யானை யைக் கூட மறைத்துவிடும் அளவுக்கு உயரமாகவும் இருந்தன. திடீரென்று ஏற்பட்ட அச்சத்தில் மேலே சென்ற காயத்ரி தனது மகள் நினைவு இன்றி, நிர்வாண மாக, நாக்கு வெளியே துருத்திக் கொண்டு கிடந்ததை பார்த்தார். மகளின் உடலை ஒரு சேலை கொண்டு மறைத்த காயத்ரி உதவி கேட்டு கூச்சலிட்டார். தனது மகளின் பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்பதால் அவறுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தாக்குதலுக்கு உள்ளானது பற்றி தான் யாரிடமும் கூற வில்லை என்று காயத்ரி கூறினார். அவளது முகத்தில் தண்ணீரை நான் தெளித்தேன். அப்போது வந்த ராஜேஷூடன் ஒரு மோட்டார் சைக்கிளில் அவளை சந்த்பா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றோம் என்ற காயத்ரி கூறினார்.
மருத்துவமனைக்குச் செல்ல ஆட்டோ
முதலில் பேசுவதற்கு அந்தப் பெண் போராடிக் கொண்டிருப்பதைப் பற்றி காவல் துறை அதிகாரிகள் எதுவும் நினைக்கவில்லை. எனது மகளின் கழுத்தை நெறிப்பதற்கு சந்தீப் முயன்றான் என்று காயத்ரி குறுக் கிட்டுக் கூறியபோது, காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அந்தப் புகாரை ஏற்றுக் கொண்டு, உனது சகோதரியை மருத்துவ மனைக்கு விரைவாக எடுத்துச் செல் என்று ராஜேஷிடம் கூறினார். இரண்டு காவலர்களை அவர் எங்களுடன் ஆட்டோ ரிக்ஷாவில் அனுப்பி வைத்தார். ஆனால், அவளுக்கு சிகிச்சை செய்வதற்கான வசதிகள் ஹஸ்திராசில் இல்லை என்று கூறப்பட்டதால், அலிகார் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லும்படி எங்க ளுக்கு அறிவுறுத்தப் பட்டது என்ற ராஜேஷ் கூறினார்.
ஹத்ராஸ் வரையில் மட்டுமே அந்த குடும்பத்துடன் பயணம் செய்வதற்கு அந்த இரு காவலர்களுக்கு அனு மதி வழங்கப்பட்டிருந்ததால், மேற்கொண்டு அலிகா ருக்கு எங்களுடன் வருவதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். 108 அவசர கால ஊர்திக்கு ராஜேஷ் தொலை பேசியில் தகவல் தெரிவித்த பிறகு வந்த ஊர்தி அவர் களை அலிகார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல இரண்டு மணி நேரம் பிடித்தது.
- தொடரும்
நன்றி: ‘தி ஹிந்து', 03-10-2020
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment