அறிந்து கொள்வோமா - ‘ANOSOGNOSIA‘ பற்றி...! (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 20, 2020

அறிந்து கொள்வோமா - ‘ANOSOGNOSIA‘ பற்றி...! (2)

நேற்றைய வாழ்வியல் தொடர்ச்சி....



இதுகுறித்துபெரிதும் கவலைப்படுவது பற்றி பிரபல மருத்துவர் மேற்காட்டிய டாக் டர் புருனோவின் கூற்று என்ன தெரியுமா?


“தனக்கு மறதியால் அடிக்கடி இப்படி தற் காலிகமாக தடுமாறுகிறது என்று உணர்ந்து கூறுகிறார்கள் என்றால் அத்தகைய விழிப் புணர்வுள்ளவர்களுக்கு மறதி நோய் என்ற மிக ‘சீரியஸ்’ பிரச்சினை ஏதும் இல்லை என் பதாகவே எழுதிக் கொள்ளலாம்!”


யார் நினைவு இழத்தல் நோயால் அவதி யுறுகிறார்களோ, அவர்கள் மறதி நோயான ‘அல்ஷைமர்ஸ்’ (Alzheimer’s) காரணமா கவே பாதிக்கப்படுகிறார் - அவர்களுக்கு இப்படி ஒரு நினைவோ, விழிப்புணர்வோ வரவே வராது என்பதைப் புரிந்து கொள் ளுவோம்.


“நமது மறதி பற்றி யார் அடிக்கடி கவனத் தோடு குறை காணுகிறார்களோ அவர்க ளுக்கு அந்த நோய் இல்லை; அந்த நோய் அவர்களைத் தாக்கவில்லை என்பதை புரிந்து கொண்டு தைரியமாய் இருங்கள்” என்கிறார் பேராசிரியர் டாக்டர் புருனோ துபே (Dr. Bruno Dubois) என்ற அந்த இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர்.



இதுபற்றி அதிகமாக குறைகூறிக் (complaint) கொண்டே இருந்தால்.


அதாவது, அது தேவையற்ற மனோ வியாதிக்குத்தான் நம்மை அழைத்துச் செல்லுமே தவிர வேறு பயன் ஏற்படாது.


இப்போது உங்களுக்கு சில சின்ன பரிசோதனைகள்!


நீங்கள் உங்கள் கண்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.



  1. கீழே உள்ள அட்டவணையில் C என்ப தைக் கண்டுபிடியுங்கள்.


OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOCOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO


மேலே சொன்னதில் கண்டுபிடித்து விட்டீர்களா? சரி  வெற்றி பெற்று விட்டீர்கள்.


அடுத்து இரண்டாவது,



  1. கீழ்க்காணும் அட்டவணையில் 6 என்ற எண்ணைக் கண்களைக் கொண்டு கண்டு பிடியுங்கள்.


999999999999999999999999999999999


999999999999999999999999999999999


999999999999999999999999999999999


699999999999999999999999999999999


999999999999999999999999999999999


999999999999999999999999999999999



  1. அடுத்தக் கட்டத்திற்குப் போவோமா?


இதோ, இப்போது ழி என்பதை கீழ்வரும் அட்டவணையில் கண்டுபிடியுங்கள் (இது சற்று கடினம் தான்).


MMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMNMM
MMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMM


இந்த மூன்று பரிசோதனைகளில் நீங்கள் வெற்றி பெற்று விட்டால், நீங்கள் நரம்பியல் நிபுணர்களிடம் (Neurologist)  போக வேண் டிய அவசியமே இல்லை. சரிதானே!


மறதியைப் பற்றி இவ்வளவு கவலைப்படு கிறோமே அதன் இன்னொரு பக்கத்தைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்கத் தவறலாமா?


மறதி மட்டும் இவ்வுலகில் இல்லாவிட்டால் இந்த உலகில் மனித வாழ்வு எவ்வளவு வேனைத் தீயில் வெந்து, நொந்து நூலாகிப் போகும் என்பதையும் ந¤னையுங்கள்!


எல்லாவற்றிலும் ஓர் அளவோடு இருப் பது அவசியம் என்ற விதி இதற்கும் கூடத் தானே பொருந்த வேண்டும். இதோ,


நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு


மறக்கத் தெரியாதா?


அர்த்தமுள்ள கேள்விதான் - வாழ்க்கை யின் துன்பங்களும், துயரங்களும் நம்மை மிரட்டும் போதும், விரட்டும்போதும்!


ஓ மனிதா! மறக்க வேண்டியவைகளை மறக்கக் கற்றுக் கொள். மறக்கக் கூடாதவை களை மறக்காமல் இரு! மனிதம் தானே தழைக்கும் அப்போது!


(நிறைவு)


No comments:

Post a Comment