இட ஒதுக்கீடு உரிமை பறிப்பு: பொதுத்துறை வங்கிகள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 16, 2020

இட ஒதுக்கீடு உரிமை பறிப்பு: பொதுத்துறை வங்கிகள் தேர்வை ரத்து செய்ய வேண்டும்

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்


சென்னை, அக். 16- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-


கடந்த 3, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 4 பொதுத்துறை வங்கி களுக்கான 1,417 அதிகாரிகள் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டில் 6 சதவீதம் குறைத்து 21 சதவீத இட ஒதுக்கீடும், எஸ்.சி. பிரிவினருக்கான 15 சதவீத இட ஒதுக்கீட்டில் 2 சதவீதத்தை குறைத்து 13 சதவீத இட ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டோர் பிரிவினருக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 1.5 சதவீதத்தை குறைத்து 6 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளன.


இப்படி குறைக்கப்பட்டதால் கிடைத்த 10 சதவீதத்தை எடுத்து முன்னேறிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய துரோகச் செயலாகும். தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை பறித்து சட்டவிரோதமாகத் தேர்வு நடத்தியவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.


இந்த தேர்வுகளை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டு உரிமையில் பா.ஜ.க. அரசு கை வைத்தால் நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டங் களை சந்திக்க நேரிடும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


அசாம் பா.ஜ.க. தலைவரின் அடாவடி:


மனிதர்கள் மட்டுமல்ல, புலிகளும் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாதாம்!


கவுகாத்தி, அக்.16- இதுவரை மனிதர்களை மட்டுமே மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று பாஜக கூட்டம் கூறிவந்தது. மாட்டிறைச்சி உண்டார்கள் அல்லது மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்பதற் காக இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை அடித்துக் கொல்லும் சம்பவங்களையும் அரங்கேற்றி வந்தது.


இந்நிலையில், அசாம் மாநில பாஜக தலைவர் சத்ய ரஞ்சன் போரா, மனிதர்கள் மட்டுமல்ல, இனிமேல் மிருகக் காட்சிசாலையிலுள்ள புலி போன்ற விலங்குகளும் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று கூறியுள்ளார்.


கவுகாத்தி மிருகக்காட்சி சாலை புலிகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றி வந்த வாகனங்களை, சத்ய ரஞ்சன் போரா ஒருகூட்டத்துடன் சென்று தடுத்துஅராஜகத்திலும் ஈடுபட்டுள்ளார். புலிகளுக்கு, மாட்டிறைச்சியை பரிமாறக் கூடாது; கவுகாத்தி மிருகக்காட்சி சாலையில் சாம்பார் இன மான்கள் அதிக அளவில் உள்ளன. அந்த உபரி மான்களைத்தான் புலிகளுக்கு இறைச்சியாக வழங்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில், அவர்களை காவல்துறையினர் விரட்டி அடித்து, மாட்டிறைச்சியை மிருகக் காட்சி சாலைக் குள் கொண்டு சென்றுள்ளனர்.


இந்நிலையில், மிருகக் காட்சி சாலையின் அதிகாரி தேஜஸ் மரிஸ்வாமி அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.


அதில், “வனவிலங்குகளுக்கு மாமிச உணவு கொடுக்கவே மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் பரிந்துரைக்கிறது. மிருகக் காட்சி சாலையின் உள்ளே இருக்கும் ஏனைய விலங்குகளின் இறைச்சியை, புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு சட்டப்படி கொடுக்க முடியாது. அத்துடன், ‘சாம்பார் மான்’ ஒரு காட்டு விலங்கு, என்ப தால் அதனைக் கொல்லவும் முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment