"சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 6, 2020

"சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!"


பிற எந்த மதமும் சொந்த மதத்தைச் சேர்ந்த வர்களைத் தீண்டத்தகாத வர்கள் என்று இழிவு படுத்தவில்லை. ஜெகத் குருக்கள் 'தீண்டாமை க்ஷேமகரமானது' என்று சொல்லுவ தில்லை. பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் - தேவடியாள் மக்கள் என்று இழிவு செய்வதில்லை.


சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று தன்மானத்தோடு பொங்கி எழுந்தால் 'பார் பார்', பிற மதங்களை எதிர்க்காமல் 'இந்துக்களை' மட்டும் எதிர்க்கிறார்கள் என்று 'சூ' காட்டும் தந்திரத்தை இன்னும் எவ்வளவு நாள்களுக்கு ஆரியம் கடைப்பிடிக்கப் போகிறது.


திருப்பதி ஏழுமலையானுக்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியனுக்கும், சங்கராச்சாரியாரே பூணூல் போடும் சூட்சமம் என்ன? கடவுள்களையே ஜாதிவாரியாகப் பிரிக்கும் கும்பல் இன்னொரு மதத்தைப் பற்றிப் பேச யோக்கியதை உடையது தானா? 'வைத்தியரே முதலில் உமது சீக்கைச் சரி செய்து கொள்வீர்.


கடவுள் இல்லை என்று தந்தை பெரியார் சொன்னது எந்த மதத்தையும் பிராக்கெட் போட்டு விதி விலக்குகளும் கொடுப்பதில்லை - நினைவிருக்கட்டும் - எந்த நேரத்திலும் குருமூர்த்தி அய்யருக்கு 'வீரமணி சிம்ம சொப்பனம்' தானோ!


மூக்கு உடைபட்டும் புத்தி வரவில்லையா?



1971ஆம் ஆண்டு தேர் தலில் ஆச்சாரியாரின் (ராஜாஜியின்) அருளாசி யோடு 'துக்ளக்' கும்பல் ராமனைக் கையில் பிடித்துக் கொண்டு, 'இந்து' ஓட்டுகளை வாரிக் கொள்ள செய்த முயற்சி மண்ணைக் கவ் வியது எல்லாம் 'துக்ளக்'கு களுக்கு மறந்து போச்சா? 'இந்த நாடு ஆஸ்திகர் வாழத் தகுதி இழந்து விட்டது - மகா புருஷர்கள் எல்லாம் வெளி யேற முடிவு செய்து விட்டனர் என்று பார்ப்பனர்களின் அரசியல் குரு ராஜாஜி கையொப் பமிட்டு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்ததும் மறந்து  போச்சா - அய்யோ பாவம் பார்ப்பனர்களுக்கு - குருமூர்த்தி களுக்கு மூக்கு உடைபட்டும் புத்தி வரவில்லையே - என்ன செய்ய!


No comments:

Post a Comment