சுதிப்தா தத்தா
அரசியல், கலாச்சாரம், சமூகம் , வரலாறு என்னும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் ஜாதி யின் நீண்ட கைகள் தொட்டுக் கொண்டிருக்கின்றன.
ஜாதி உண்மையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது (Caste Matters) என்ற தனது அண்மையில் வெளியிடப்பட்ட நூலில் தொடங்கும் சூரஜ் யங்டே இரண்டாம் தரக் குடிமகனாக இந்த உலகத்தில் வாழ்வதற்கு நான் வற்புறுத்தப் பட்டபோது, பார்ப்ப னரும் அவர்களது உலகளாவிய தன்மையும்தான் முதன்மையானவை அல்லது முக்கியமானவை என்று கூறப்பட்டது என்று தொடக்கத்திலேயே கூறு கிறார். யானைகளிடையே எறும்புகள் - (Ants among elephants) என்னும் நூலில் சுஜாதா கில்டாவும், ஒரு தாழ்த்தப்பட்டோராக (தலித்) வெளியே வருவது - (Coming out as Dalit) என்னும் நூலில் யாஷிகா டத்தும், வசதியற்ற தாழ்த்தப்பட்ட ஜாதியினர் சகித்துக் கொள்ளும் மனிதத் தன்மையற்ற நடத்தையைப் பற்றியும், ஜாதி நடைமுறையின் சோகம் பற்றியும், நமது நாட்டில் உள்ள நடைமுறையின் நிலைப்பாட்டை கண்ணுக்குத் தெரியாத கை ஒன்று மாற்றுவது பற்றியும் நினைவு கூர்ந்துள்ளனர். நாஜி ஜெர்மனி மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளில் நிலவும் ஜாதி நடைமுறைகளுடன், தனது சொந்த நாட்டிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வரும் இன அடிப்படையிலான ஜாதி அமைப்பு பிரமிட்டினை இணைத்து அதைப் பற்றி புரிந்து கொள்வதற்கு அமெரிக்க பத்திரிகையா ளரும் எழுத் தாளருமான இசபெல் வில்கர்சன் இப் போது முயற்சி செய்துள்ளார்.
இழிதன்மை என்னும் களங்கம்
ஜாதியின் பெயரால் மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் தாங்களே எத்தகைய தீங்குகளையெல் லாம் செய்து கொள்வதற்கு இயன்றவர்கள் என்ற துன்பம் நிறைந்த ஆய்வினை மேற்கொண்ட வில்க ர்சன் அடிமட்டத்தில் தரம் பிரிக்கப்பட்ட மக்களை மனிதத் தன்மையே அற்றதொரு நிலையில் வைத் திருப்பதை நியாயப்படுத்துவதற்கு அவர்கள் மீது களங்கம் கற்பிப்பதற்கு ஒவ்வொரு பாடமும் செயலும் நம்பப்பட்டு வருகிறது என்று எழுதுகிறார். ஜாதி நடை முறை என்பது ஒரு செயற்கையான கட்டமைப்பாகும் என்பதை சுட்டிக் காட்டும் அவர், மற்ற குழுக்களின் ஊகிக்கப்பட்ட இழி தன்மைக்கு எதிராக, ஒரு குழுவின் ஊகிக்கப்பட்ட உயர்தன்மையை பொருத்தி, மனித மதிப்பீட்டினை தரவரிசைப்படுத்தும் ஒரு நிலையானதாக, மக்களின் மனங்களில் இந்த ஜாதி நடைமுறை ஆழமாக வேரூன்றிப் போயுள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். அழிவைத் தரும் எடுத்துக் காட்டு ஆதாரங்களுடன், அவற்றில் சிலவற்றை தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தில் இருந்தே பெறப்பட்ட அவர், பல ஆண்டு ஆய் வுக்குப் பிறகும், குன்னர் (Gunnar), மிர்தல் (Myrdal), அலிசான் டேவிஸ் (Allison Davis), பி.ஆர். அம் பேத்கர் (B.R.Ambedkarஷீ) ஆகியோரின் நூல்களைப் படித்தும், பல உலக நாடுகளிடையே பல சமூக அறி ஞர்களை நேர்காணல் கண்ட பிறகும், ஜாதிகளிடையே யான ஏற்றத் தாழ்வு என்றால், எந்த ஒரு குழு அதி காரத்தைப் பெற்றுள்ளது, எந்த ஒரு குழு அதிகாரத் தைப் பெற்றிருக்கவில்லை என்ற பொருளையே அது தரும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். அமெரிக்காவில் ஜாதி என்பது உடல் எலும்புகளைப் போன்றது; இனம் என்பது உடலின் தோலைப் போன்றது என்று அவர் கூறுகிறார்.
ஒவ்வொரு குழுவையும் அதனதன் இடத்தில் வைக்க இயன்ற ஆற்றல் மிகுந்த கட்டமைப்பே இந் திய ஜாதி நடைமுறையும். மக்களால் உருவாக்கப்பட்ட இத்தகைய பாகுபாடுகளை உடைத்தெறிந்தவர்களுக் கும் கூட அவ்வாறு உடைத்தெறிவது ஓர் எளிதான மாற்றமாக இருக்கவில்லை. ஜாதி நடைமுறையை ஒழிப்பதற்கு தனது வாழ்நாள் முழுவதும் போராடிய அம்பேத்கர், இந்த ஜாதி நடைமுறை மக்களின் மனதில் ஏன் இந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதைப் பற்றி வாதாடும்போது, ஜாதி என்பது ஒரு கண்ணோட்டமும், ஒரு மனநிலையுமே ஆகும் என்று கூறியிருப்பதை சுட்டிக் காட்டுகிறார். சக அமெரிக்க மக்களுடன் தொடர்பு உடையவராக அம்பேத்கரை ஆக்குவதற்காக அவரை இந்தியாவின் மார்டின் லூதர் கிங் என்று அவர் ஒரு முறை அழைத்துள்ளார். இந்தியாவில் உள்ள தீண்டத்தகாத மக்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள கருப்பர் இன மக்கள் ஆகியோரிடையே நிலவும் நிலையில் மிகுந்த ஒற்றுமை உள்ளது என்று சமூக இயலாளர் டபிள்யூ. ஈ.பி. டூ போயிசு என்பவருக்கு (W.E.B. Du Bois) எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியா வாக இருந்தாலும் சரி, ஜாதியும், அதற்கான மத அனுமதி உள்ளிட்ட அதன் எட்டு தூண்களும், ஒவ்வொருவரையும் அடிமையாகப் பிடித்து வைத்து இருக்கின்றது. தான் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் தான் அல்ல என்ற ஒரு பாவனை செய்யுமாறு ஒரு கருப்பு இனப் பெண்மணியை அது நிர்பந்திக்கிறது. உயர் ஜாதி மக்களுக்கு தான் இணையானவர் அல்ல என்று ஒரு தாழ்த்தப்பட்ட அறிஞரை அது உணரச் செய்கிறது. மிகுந்த அச்சத்துடனேயே மக்களை அது வாழ அனுமதிக்கிறது. கவலை தரும் பல கதைகளை அவர் கூறுகிறார். ஒரு கருப்பின சிறுவன் அவனது தந்தை யின் கண்முன்னாலேயே நீரில் மூழ்கி இறந்தது. வேண்டத்தகாதவர்கள் என்று கருதப்படும் மக்கள் வெட்டிக் கொல்லப்படுவது, அவ்வாறு வெட்டி கொல்லப்பட்டவர்களின் படங்கள் கொண்ட அஞ்சல் அட்டைகள் வெளியிடப்படுவது என்பது போன்ற நிகழ்ச்சிகளே 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப் பட்ட ஒரு பொதுவான கடிதப் போக்குவரத்தாகவே இருந்தன. போதை மருந்து பழக்கம், குற்றங்களுக்கு வழி விடும் வேலையில்லா திண்டாட்டம் போன்ற அனைத்து சமூகக் கேடுகளுக்கும் பலி கிடாக்களாக ஆக்கப்படும் தாழ்த்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்த இந்த மக்கள் அன்றாட அவமா னத்திற்கு உள்ளாக்கப் படுவதுடன் மக்களிடையே பெருத்த சமத்துவமின்மையும் நிலவச் செய்கிறது.
தீர்வுக்கான ஒரு வழி
ஆனால், அவரது நூல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இழைக்கப்பட்ட அவமானங்களின் ஒரு தொகுப்பு அறிக்கை போல இருப்பதல்ல. இதர சூரியர் கள் தரும் வெப்பம் - The Warmth of other Suns என்ற தனது நூலின் எழுத்தாளரும், புலிட்சர் பரிசு பெற்ற செய்தியாளருமானவர், ஜாதி நடைமுறையின் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை அளிக்கும் வகையில் ஜாதியின் வரலாற்றின் மீதும், அதன் விளைவுகள் மீதும் ஒரு வெளிச்சத்தை அவர் பாய்ச்சியுள்ளார். தலைமுறை தலை முறையாக தங்கள் மீது ஜாதி நடைமுறை கொண் டுள்ள பிடியை உடைத்தெறிந்துவிட்டு மனித இனத் தினால் விடுதலை பெறவும் இயலும் என்று அவர் எழுதுகிறார். ஆனால், ஜெர்மனி நாடு தனது கடந்த கால நாஜிக் கொடுமைகளுக்கு பிராயச் சித்தம் செய்த பிறகு, அந்நாட்டில் உள்ள அனைத்து நினைவிடங்களும் பாதிக்கப் பட்டவர்களுக்கானவை யாக மட்டும் உள்ளனவே அன்றி, தீங்கிழைத்த ஆக்கிர மிப்பாளர்களின் நினைவிடங்களாக இருக்க வில்லை. இனவெறி முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பிறகு தென் ஆப்பிரிக்காவில் உண்மையைக் கண்ட றிந்து இழைக்கப்பட்ட இனவெறிக் கொடுமைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆணையம் ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது. மக்களிடையே அதிக அளவில் இன வெறி உணர்வு நிலவும் இடைவெளியைக் குறைப் பதற்கு அமெரிக்கா செய்ய வேண்டியவை இன்னமும் அதிகமாக உள்ளன.
1959ஆம் ஆண்டில் இளைய மார்டின் லூதர் கிங்கும் அவரது மனைவியும் இந்தியா வுக்கு வருகை தந்தது பற்றி அவர் எழுதுகிறார்: "தனது மக்கள் போராடுவதற்கு ஊக்கம் அளித்த, வன்முறை யற்ற விடுதலைப் போராட்டத்தின் மூலம் ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து சுதந்திரம் பெறப் போராடிய மகாத்மா காந்தி பிறந்த மண்ணைப் பார்க்க அந்த மனித உரிமை தலைவர் விரும்பினார்." உலகின் நீண்ட கால ஜனநாயக நாடான அமெரிக்காவும், உல கின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும், சட்டப்படி மக்களிடையேயான ஏற்றத் தாழ்வுகளைப் போக்கிவிட்ட போதிலும், தாழ்த்தப்பட்ட மக்களும், அமெரிக்க கருப்பினத்தவரும் இன்னமும் மிருகத் தனமாகத் தாக்கப்படுகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள இந்த ஆண்டில், மக்களி டையே ஆழமாகப் பதிந்துள்ள, மனதை உறைய வைக்கும் ஒபாமா மற்றும் டிரம்ப் ஆகியோரின் அதிபர் கால நிகழ்வுகளைப் பற்றிய அவரது எழுத்து மக்களின் நினைவுக்குக் கொண்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டில் டிரம்ப் வெற்றி பெற்றபோது, இவ்வளவு அதிக அளவிலான மக்கள் எவ்வாறு தங்கள் நலனுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்று முன்னேற்றக் கருத்து கொண்ட பலரும் கூறியதைத் தான் கேட்டதாக அவர் கூறுகிறார். ஜாதி நடை முறையை முன் எப்போதும் இருப்பது போலவே கடைப்பிடிக்க அவர்கள் விரும்பியதால்தான் தங்க ளின் நலன்களுக்காக அவர்கள் அவ்வாறு வாக்க ளித்துள்ளனர் என்று வில்கர்சன் கூறுகிறார்.
அமெரிக்க இன உறவுகளை, ஜெர்மனி நாஜிகளின் கொடுமைகள் மற்றும் இந்திய ஜாதி நடைமுறையுடன் இணைப்பது தவறென சிலர் வாதாடவும் கூடும். உலகெங்கும் இருக்கும் ஆக்கிரமிப் பாளர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தக்க பாடங்களைத் தரும் ஆற்றல் மிகுந்த ஆவணம் ஒன்றை வைத்துக் கொண்டு வில்கர்சன் வாதாடுகிறார்.
நன்றி: ‘தி இந்து', 04.10.2020
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment