தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உறுதி
திருவள்ளூர்,அக்.3, விவசாயிகள் பாதிக்கும் வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடு படுவோம் என்று திமுக தலைவர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவள்ளூர் அருகே புதுச்சத்திரம் கொரட்டூர் கிராமத்தில் திமுக சார்பில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட சிறப்பு பொதுமக்கள் சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பங்கேற்று, அதில் பங்கேற்றிருந்த பெண்களிடம் குறை களை கேட்டறிந்தார். அப்போது, பல ஆண்டுகளாக இருந்து வருவ தாகவும் பட்டா வழங்கப்படவில்லை என்றனர். அதேபோல், வேப்பம்பட்டு கிராமத்தில் புறவழிச்சாலை பாலம், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள், அப்போது, நேற்று (அக்.2) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகளை செய்த ஆட்சி திமுக ஆட்சியாகும். அந்த வகையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதோடு, விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் விவசாயிகள் பாதிக்கும் வகையில் அந்த வேளாண்மைக்கு புதிதாக 3 சட்டங்கள் கொண்டு வந்து நிறை வேற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல், கடந்த உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட் டனர். ஆனால், திமுகவினர் உள் ளாட்சி அமைப்புகளில் 70 சதவீதமும், மற்றவர்கள் 30 சதவீதம் பேர் உள் ளனர். இந்த நிலையில் விவ சாயிகளுக்கான எதிரான மசோதாக்கள் என்பதால் ஒவ்வொரு கிராம ஊராட் சிகளிலும் தீர்மானம் கொண்டு வரவும் முடிவு செய்தனர். அதனால், இதையறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்துவிட்டு, இரவில் ரத்து செய்துவிட்டனர். எனவே, மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை யில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ள தாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பொது மக்கள் சபை கூட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங் களை திரும்பப் பெறவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
No comments:
Post a Comment