புழல், சோழவரம் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை  நீர்மட்டம் உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

புழல், சோழவரம் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை  நீர்மட்டம் உயர்வு


சென்னை, அக்.22  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட் களாகவே மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப் பதால் ஏரிகளின் நீர்மட்டமும் படிப் படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு மழை பெய்து உள்ளது.


இதில் புழல் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 27 மில்லி மீட்டரும், சோழ வரத்தில் 22 மில்லி மீட்டரும், தாமரைப்பாக்கத்தில் 19 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. அத்துடன் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப் படையில் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் பூண்டி ஏரிக்கு 587 கன அடி வீதம் வருகிறது. இதுதவிர புழல் ஏரிக்கு 160 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 480 கன அடி வீதமும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஏரிகளின் நீர் மட்டம் சற்று உயர்ந்து உள்ளது.


அதேநேரம் குடிநீர் தேவைக்காக பூண்டியில் இருந்து 625 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 113 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 68 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.


மேற்கண்ட தகவலை பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


No comments:

Post a Comment