மொழிப் போராட்டத்தைத் தாண்டி சமூகநீதிப் போராட்டம் இந்தியா முழுவதும் உருவாகும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 18, 2020

மொழிப் போராட்டத்தைத் தாண்டி சமூகநீதிப் போராட்டம் இந்தியா முழுவதும் உருவாகும்!

உயர்ஜாதி இட ஒதுக்கீட்டில் மட்டும் அவசரம்; பிற்படுத்தப்பட்டவர்களுக்கான  இட ஒதுக்கீட்டில் மெத்தனமா?                                                                                                


’’சன் நியூஸ்' தொலைக்காட்சியில் தமிழர் தலைவர்


 


சென்னை, அக்.18 உயர்ஜாதி இட ஒதுக்கீட்டில் மட்டும் அவசரம்; பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் மத்திய அரசு மெத் தனமா? மொழிப் போராட்டத்தைத் தாண்டி சமூகநீதிப் போராட்டம் இந் தியா முழுவதும் உருவாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


நேற்று (17.10.2020) ‘சன் நியூஸ்' தொலைக்காட்சிக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.


அப்பேட்டி விவரம் வருமாறு:


பிற்படுத்தப்பட்டவர்கள் 60 சதவிகிதம்


இருக்கக் கூடிய நிலையில்...


கேள்வி: சமூகநீதிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மத்திய அரசு என்று நீங்கள் அறிக்கை வெளியிட்டு இருக்கிறீர்கள்; குறிப் பாக, பிற்படுத்தப்பட்டோர் 60 சதவி கிதம் இருக்கக்கூடிய நிலையில், அவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்ற ஒரு கேள் வியையும் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறீர்களே?


தமிழர் தலைவர்: அரசமைப்புச் சட்டப்படி நடக்க வேண்டியது அரசுகள் கடமையாகும். அதைத் தான் நாம் கேட்கிறோம். இட ஒதுக் கீடு என்பது தமிழ்நாட்டில் 69 சதவிகிதம் அமலில் இருக்கிறது. அதன்படி 50 விழுக்காட்டை பிற் படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து கொடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, அனைத்து கட்சிகள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு கொடுத்து, மூன்று மாதங்கள் ஆன நிலையில், அந்த இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே கொடுக்கவேண்டும் என்று ஆளுங்கட்சி வழக்குத் தொடர்ந்தது.


இந்தச் சூழல்நிலையில், இவர்கள் கேட்பது நியாயம்தான்; அதனை மறுப்பதற்கு ஒன்றுமில்லை என்று உச்சநீதிமன்றமும் சொன்னது. அந்த வழக்கு விசாரணையில் ஒரு கருத்தை அவர்கள் கேட்டார்கள், ஏன் இதில் தாமதம்? என்று மத்திய அரசை கேட்டார்கள்.


மத்திய அரசு ஒத்துழையாமை இயக்கத்தைக் எடுத்து, எப்படியாவது இதனைத் தவிர்க்கவேண்டும் என்பதே அவர்களுடைய நடைமுறையாகவும், கொள்கையாகவும் இருப்பது வெளிப் படையாகவே தெரிகிறது.


27 சதவிகித இட ஒதுக்கீட்டினை அளிக்கலாமே!


உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு அவர்கள் பதில் அளிக்கும்போது, ‘‘இல்லை, இல்லை. நாங்கள் கலந்தாலோசித்து விட்டுத்தான் சொல்லவேண்டும்'' என்று மத்திய அரசு வழக்குரைஞர் சொன்னபோது, இரண்டு நாள்கள் அவகாசம் கொடுத் தனர் நீதிபதிகள்.


69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான புள்ளிவிவரங்களைக் கேட்டார்கள்; அது உடனடியாகக் கிடைக்கவில்லை; தாமதமாகிறது என்று சொன்னவுடன், சரி, இந்த ஆண்டிற்கு மட்டும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை அளிக் கலாமா? அதன்மூலம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பயனளிக்குமே என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் சொன்ன வுடன்,


உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘‘நல்ல யோசனை; அதற்கு என்ன வழி?'' என்று மத்திய அரசு வழக்குரைஞரிடம் கேட்டபோது,


அதற்குப் பதில் சொல்லாமல், 50 சதவிகிதமும் கொடுக்க முடியாது; 27 சதவிகிதமும் கொடுக்க முடியாது என்ப தற்கு எந்தக் காரணத்தையும் அவர் சொல்லவில்லை.


அடுத்த ஆண்டாவது வாய்ப்பு இருக்கிறதா?


கேள்வி: அடுத்த ஆண்டாவது அவர்களுக்குக் கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அல்லது முழுமையாகத் தவிர்ப்பதற்குத்தான் இந்த முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறதா?


தமிழர் தலைவர்: நிச்சயமாக! இதில் ஒன்றும் பெரிய அளவிற்கு, தண்டால் எடுக்கவேண்டிய அவசியமில்லை. மிகப்பெரிய அளவில் புள்ளி விவரங்களைத் தேடவேண்டிய அவசியமில்லை.


உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், இன்றைக்கு இருக்கின்ற கணினி யுகத்தில், எவ்வளவு பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று கணக்கெடுப்பதற்கு ஒரு சில மணிநேரத்தில் இந்தத் தகவல்களை எடுத்துவிடலாம். மனம் இருந்தால், மார்க்கம் உண்டு. ஆனால், அவர்களுக்கு மனம் இல்லை. காரணம் என்னவென்றால், எப்படியாவது பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது முதலில். இதை முதலில் ஒழித்துவிட்டால், அதற்கு அடுத்த கட்டம், எஸ்.சி., எஸ்.டி., என்று சொல்லக்கூடிய ஒடுக்கப்பட்டோர் மக்கள் தலையிலும் கைவைக்கலாம் என்பதற்காக, ‘‘தெருக்கோடியில் தீப்பிடித்தால், அது கடைசி வீட்டிலும் பிடிக்கும்'' என்று சொல்வதைப்போல ஒரு திட்டத்தை வைத்து, இறுதியில், இட ஒதுக்கீட்டையே காலி செய்து, அதற்குப்பதிலாக உயர்ஜாதிக்காரர்களுக்கு வசதியாக, பொருளாதார அடிப்படையைக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கமாகும். இது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகும்.


அதேநேரத்தில், இதற்கு இவ்வளவு காலதாமதம் செய்யக்கூடியவர்கள், 10 சதவிகித இட ஒதுக்கீட்டினை உயர்ஜாதியில் ஏழைகளாக இருக்கிறவர்களுக்காக அரசமைப்புச் சட்டத் திருத்தம் 103 ஆவதைக் கொண்டு வந்து, எத்தனை நாளில் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்றத்தில்? அய்ந்து நாள்களுக்குள் குடியரசுத் தலைவர் ஒப்புதல் உள்பட பெற்று, அதற்கு நிதி ஒதுக்கி, அது நடைமுறையில் வரக்கூடிய அளவிற்கு செய்தார்கள்; இதில் எவ்வளவு அவசரம் காட்டினார்கள் என்பதையும் எண்ணிப்பாருங்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டில் எவ்வளவு மெத்தனம் காட்டுகிறார்கள், எவ்வளவு அலட்சியம் காட்டுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்தாலே, அவர்களுடைய உள்ளம் எப்படிப்பட்டது? அவர்களுடைய கொள்கை நிலைப்பாடு எப்படிப்பட்டது என்பது தெரியும்?


எனவேதான், மீண்டும் தமிழ்நாட்டில் ஒரு சமூகநீதிப் போராட்டம் உருவாவதற்கு, அனைத்து மக்களும் ஒன்று திரண்டு போராடக் கூடிய அளவிற்கு இன்றைக்குச் சூழ்நிலை மேகங்கள் திரண்டிருக்கின்றன.


மொழிப் போராட்டத்தைத் தாண்டிய போராட்டமாக சமூகநீதிப் போராட்டம் இருக்கும்!


கேள்வி: வருங்காலத்தில், எந்த மாதிரியான நடவடிக்கைகளை அரசோ, அரசியல் கட்சிகளோ மேற்கொள்ளும்போது இதற்கு ஒரு தீர்வு வரும் என்று எதிர்பார்க்கலாம். மத்திய அரசு இதற்கு உடன்படுவதற்கான வாய்ப்புகள் இனி இருக்கிறதா?


தமிழர் தலைவர்: இந்தக் காலகட்டத்தில் மேலும் அவர்கள் பிடிவாதம் பிடிப்பார்களேயானால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் ஒரு போராட்டம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் நிச்சயமாக வரும்.


இன்றைக்கே அந்த உணர்ச்சி வெடிப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. 7.5 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தில்கூட நாங்கள் கையெழுத்துப் போடமாட்டோம் என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றால், ஆளுநர் சொல்லவில்லை, மத்திய அரசினுடைய கை அங்கே இருக்கிறது என்றுதான் அதற்குப் பொருள்.


இது பெருஉரு எடுத்து வரக்கூடிய அளவில், மக்கள் திரண்டு போராட வேண்டிய கட்டத்தில், சமூகநீதிப் போராட்டம் மிகப்பெரிய அளவில் மொழிப் போராட்டத்தைத் தாண்டிய போராட்டமாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உருவாவதற்கு அந்தத் துடிப்பை இவர்கள் உருவாக்குகிறார்கள். அதற்கான மேகங்கள் கனிந்திருக்கின்றன.


அவர்களுக்குக் கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அல்லது முழுமையாகத் தவிர்ப்பதற்குத்தான் இந்த முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறதா?
தமிழர் தலைவர்: நிச்சயமாக! இதில் ஒன்றும் பெரிய அளவிற்கு, தண்டால் எடுக்கவேண்டிய அவசியமில்லை. மிகப்பெரிய அளவில் புள்ளி விவரங்களைத் தேடவேண்டிய அவசியமில்லை.
உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், இன்றைக்கு இருக்கின்ற கணினி யுகத்தில், எவ்வளவு பேர் பிற்படுத்தப்பட் டவர்கள் என்று கணக்கெடுப்பதற்கு ஒரு சில மணிநேரத்தில் இந்தத் தகவல்களை எடுத்துவிடலாம். மனம் இருந்தால், மார்க்கம் உண்டு. ஆனால், அவர்களுக்கு மனம் இல்லை. காரணம் என்ன வென்றால், எப்படியாவது பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது முதலில். இதை முதலில் ஒழித்துவிட்டால், அதற்கு அடுத்த கட்டம், எஸ்.சி., எஸ்.டி., என்று சொல்லக்கூடிய ஒடுக்கப்பட்டோர் மக்கள் தலையிலும் கைவைக்கலாம் என்பதற் காக, ‘‘தெருக்கோடியில் தீப்பிடித்தால், அது கடைசி வீட்டிலும் பிடிக்கும்'' என்று சொல்வதைப்போல ஒரு திட்டத்தை வைத்து, இறுதியில், இட ஒதுக்கீட்டையே காலி செய்து, அதற்குப்பதிலாக உயர்ஜாதிக்காரர்களுக்கு வசதியாக, பொருளாதார அடிப் படையைக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கமாகும். இது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகும்.
அதேநேரத்தில், இதற்கு இவ்வளவு காலதாமதம் செய்யக் கூடியவர்கள், 10 சதவிகித இட ஒதுக்கீட்டினை உயர்ஜாதியில் ஏழைகளாக இருக்கிறவர்களுக்காக அரசமைப்புச் சட்டத் திருத் தம் 103 ஆவதைக் கொண்டு வந்து, எத்தனை நாளில் நிறைவேற் றப்பட்டது நாடாளுமன்றத்தில்? அய்ந்து நாள்களுக்குள் குடியர சுத் தலைவர் ஒப்புதல் உள்பட பெற்று, அதற்கு நிதி ஒதுக்கி, அது நடைமுறையில் வரக்கூடிய அளவிற்கு செய்தார்கள்; இதில் எவ்வளவு அவசரம் காட்டினார்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டில் எவ்வளவு மெத்தனம் காட்டுகிறார்கள், எவ்வளவு அலட்சியம் காட்டுகிறார் கள் என்பதை எண்ணிப் பார்த்தாலே, அவர்களுடைய உள்ளம் எப்படிப்பட்டது? அவர்களுடைய கொள்கை நிலைப்பாடு எப்படிப்பட்டது என்பது தெரியும்?
எனவேதான், மீண்டும் தமிழ்நாட்டில் ஒரு சமூகநீதிப் போராட்டம் உருவாவதற்கு, அனைத்து மக்களும் ஒன்று திரண்டு போராடக் கூடிய அளவிற்கு இன்றைக்குச் சூழ்நிலை மேகங்கள் திரண்டிருக்கின்றன.
மொழிப் போராட்டத்தைத் தாண்டிய போராட்டமாக சமூகநீதிப் போராட்டம் இருக்கும்!
கேள்வி: வருங்காலத்தில், எந்த மாதிரியான நடவடிக்கைகளை அரசோ, அரசியல் கட்சிகளோ மேற்கொள்ளும்போது இதற்கு ஒரு தீர்வு வரும் என்று எதிர்பார்க்கலாம். மத்திய அரசு இதற்கு உடன்படுவதற்கான வாய்ப்புகள் இனி இருக்கிறதா?
தமிழர் தலைவர்: இந்தக் காலகட்டத்தில் மேலும் அவர்கள் பிடிவாதம் பிடிப்பார்களேயானால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் ஒரு போராட்டம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் நிச்சயமாக வரும்.
இன்றைக்கே அந்த உணர்ச்சி வெடிப்புகள் வர ஆரம்பித் திருக்கின்றன. 7.5 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தில்கூட நாங்கள் கையெழுத்துப் போடமாட்டோம் என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றால், ஆளுநர் சொல்லவில்லை, மத்திய அரசினுடைய கை அங்கே இருக்கிறது என்றுதான் அதற்குப் பொருள்.
இது பெருஉரு எடுத்து வரக்கூடிய அளவில், மக்கள் திரண்டு போராட வேண்டிய கட்டத்தில், சமூகநீதிப் போராட்டம் மிகப் பெரிய அளவில் மொழிப் போராட்டத்தைத் தாண்டிய போராட் டமாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உருவா வதற்கு அந்தத் துடிப்பை இவர்கள் உருவாக்குகிறார்கள். அதற்கான மேகங்கள் கனிந்திருக்கின்றன.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ‘சன்' நியூஸ் தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment