புதுடில்லி, அக். 17- 2018 - 19 நிதியாண்டில், கார்ப்பரேட் நிறுவனங்க ளும், தொழில் நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய நன் கொடைகள் குறித்து, ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளிப்படையாக அறிவித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயேஇந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதில், நாட்டிலேயே பாஜக-வுக்குத்தான் கார்ப்பரேட் நிறுவனங்க ளும், தொழில் நிறுவனங்களும் அதிகளவில் நன்கொடை வழங்கி இருப்பதாகவும், ஆயிரத்து 573 கார்ப்பரேட் முதலாளிகள் ரூ. 698 கோடியை வாரி வழங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2018-19 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த மொத்த நன்கொடையே ரூ. 876கோடியே 10 லட்சம்தான். இதில் பாஜக-வுக்கு மட்டும் சுமார் 700 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 122 கார்ப்பரேட் முதலாளிகள் ரூ. 122 கோடி மட்டுமே நன்கொடை அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment