தாழ்த்தப்பட்டவரை காலில் விழ வைத்த ஜாதி ஆணவம் 7 பேர் மீது வழக்குப் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 14, 2020

தாழ்த்தப்பட்டவரை காலில் விழ வைத்த ஜாதி ஆணவம் 7 பேர் மீது வழக்குப் பதிவு


தூத்துக்குடி,அக்.14, உயர்ஜாதி யினரின் பட்டிக்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரின் ஆட்டுக் குட்டி சென்றதற்காக காலில் விழுந்து அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள ஓலைக்குளம் கிரா மத்தை சேர்ந்தவர் பால்ராஜ். தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த  இவர் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்றுள்ளார்.


அப்போது கூட்டத்தில் இருந்த ஆடு ஒன்று திடீரென அருகில் இருந்த மற்றொரு ஆட்டுப்பட்டிக்குள் சென்றுள்ளது. அதன் உரிமையா ளராக மேல் ஜாதியைச் சேர்ந்த சிவசங்கு என்பவர் இருந்து வருகிறார். ஏற்கெனவே இருவருக்கும் ஒரே இடத் தில் ஆடுகளை மேய்த்தது தொடர் பாக  முன்பகை இருந்து வந்துள்ளது.


இந்நிலையில் தன்னுடைய ஆட்டை பிடிக்க சென்ற பால்ராஜை சிவசங்கும், அவரது உறவினர்களும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்லி கம்பால் தாக்கியுள்ளனர். பால்ராஜூம் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்து மற்றவர்களுக்கு சமூக வளைதளங்களில் வைரலானது.


இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பால்ராஜ், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். இதனடிப்படையில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ்   சிவசங்கு, சங்கிலிபாண்டி, உடையம்மாள், பெரியமாரி, வீரையா, மகேந்திரன், மகாராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது கயத்தார் காவல் நிலையத்தில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த காட்சிப்பதிவை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமா வளவன் ட்விட்டரில் வெளியிட் டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘வட இந்திய மாநிலங்களில் மட்டு மல்ல; தமிழ்நாட்டிலும் தொடரும் அநாகரிகம். கயத்தாறு அருகே ஓலைக்குளம் கிராமம் ஆதிக்குடியினத்தைச் சார்ந்தவரின் ஆடுகள் தங்களின் கொல்லைப் பகுதியில் எப்படி நுழையலாமென இந்தக் கேவலத்தை அரங்கேற்றியுள்ளனராம்’ என பதிவிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


 


 


 


No comments:

Post a Comment