தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இடம் அளிப்பது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் கிட்டத்தட்ட 45 நாள்கள் ஆளுநர் இழுத்தடித்தார்.
தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பிலும் எழுந்த கடும் எதிர்ப்புகள் காரணமாகவும், எதிர்க்கட்சிகள் ஒருமனதாகத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தமையாலும், ஆளும் அரசு நேற்று (29.10.2020) பிறப்பித்த அரசாணை காரணமாகவும் வேறு வழியின்றி ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மக்கள் சக்தி வென்றது!
காலதாமதம் செய்தாலும், தமிழக அரசின் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியதை வரவேற்கிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
30.10.2020
No comments:
Post a Comment