7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் ஆளுநருக்கு அழுத்தம் தராதது முதல்வர் மாணவர்களுக்கு செய்யும் துரோகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 20, 2020

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் ஆளுநருக்கு அழுத்தம் தராதது முதல்வர் மாணவர்களுக்கு செய்யும் துரோகம்

மு.க.ஸ்டாலின் கண்டனம்



சென்னை, அக். 20- அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடதுக்கீடு விவகாரத்தில், ஆளுநருக்கு, முதல்வர் அழுத் தம் கொடுக்காதது அந்த மாணவர்களுக்கு செய்யும் துரோகம் என்று தளபதி மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


திமுக தலைவர் மு.க.ஸ்டா லின், நேற்று (19.10.2020) தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:


மருத்துவ கல்விக்கான நீட் தேர்வால் அரசு பள்ளி மாண வர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக சட்டமன்றத் தில் நிறைவேற்றி அனுப்பப் பட்ட மசோதாவிற்கு இன்று வரை ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதும், அதுகுறித்த எந்த அழுத்தத் தையும் ஆளுநருக்கு கொடுக் காமல் முதல்வர் பழனிசாமி வேடிக்கை பார்ப்பதும், அர சுப் பள்ளி மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.


தமிழகத்திற்கு ‘நீட்' தேர் வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சட்டமன் றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், ‘ஆளுநர், முதல்வர், மத்திய பாஜ அரசு’ ஒரு ரகசிய கூட்டணி அமைத்து, நீர்த்து போக வைத்தது போல், அரசு பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதா வையும் நீர்த்து போக வைத்து விடக்கூடாது. நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட் டுள்ள நிலையில் இந்த மசோதாவிற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment