அதிமுகவுடன் இணைந்து போராட தி.மு.க. தயார் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தரவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

அதிமுகவுடன் இணைந்து போராட தி.மு.க. தயார் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தரவேண்டும்

ஆளுநருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்



சென்னை, அக்.22 அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று ஆளு நருக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவ காரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து திமுக போராட தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.10.2020) தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய பிறகும், தமிழக ஆளுநர் இன்னும் அதற்கு அனுமதி வழங் காமல் தாமதித்து வருகிறார். மசோதாவுக்கு உரிய அங்கீகாரத்தை ஆளுநர் உடனடியாக வழங்க வேண்டும் என்று அவருக்கு கடிதம் எழுதி உள்ளேன். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைக்கப்பட் டிருக்கும் சட்டமன்றத்தின் உரிமை மற்றும் அதிகாரம் சம்பந்தப்பட்ட தாகும். கவர்னர் இதில் மேலும் பாராமுகமும், தாமதமும் காட்டுவது நல்லதல்ல.


இந்த நேர்வில், மாநில உரிமை களுக்காக அதிமுக அரசுடன் இணைந்து போராட, திமுக தயாராக இருக்கிறது. எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்து பேசி, என்ன வகைப் போராட்டம், எந்த நாளில் என்பதை முடிவு செய்து அறிவித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


மேலும் அவரது டிவிட்டர் பக்கத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தை இணைத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர் களின் மருத்துவ கனவினை சிதைக்கும் நீட் தேர்வினை அடியோடு ரத்து செய்யவேண்டும் என்பது திமுக தீர்மானமான கோரிக்கை என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.


அக்கோரிக்கை நிறைவேறும் வரை, 2017-_2018ஆம் கல்வியாண்டு முதல் நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து ஆராய, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலையரசன் தலைமையில் மூத்த வல்லுநர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் “எம்.பி.பி.எஸ் மற்றும் நீட் தேர்வு மாநிலத்தில் தகுதித் தேர்வாக குறித்துரைக்கப்பட்டு உள்ள பிற மருத்துவப் படிப்பு களுக்கான சேர்க்கையில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற (நீட்) அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு முன்னுரிமை” அளிப்பதன் மூலம் அரசுப் பள்ளி களிலும் தனியார் பள்ளிகளிலும் படித்த மாணவர்களுக்கிடையே ஒரு சமத்துவத்தைக் கொண்டு வரலாம் என தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்டது.


மேற்கண்ட முடிவின் அடிப் படையில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர் களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும், ‘‘தமிழ்நாடு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட முன்வடிவு கடந்த 15.9.2020 அன்று ஒருமனதாக நிறை வேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16.10.2020 அன்று வெளியிடப்பட் டுள்ள நிலையில், தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மசோதா விற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் தான் இந்த கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட முடியும். ஆகவே, இந்த சட்ட முன்வடிவினை ஆதரித்து நிறைவேற்றிய பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் மேற்கண்ட சட்ட முன்வடிவுக்கு உடனடியாக தாங்கள் ஒப்புதல் அளித்து, அரசுப் பள்ளி மாண வர்களின் மருத்துவக் கல்விக் கனவை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சட்ட முன்வடிவுக்கு உடனடியாக தாங்கள் ஒப்புதல் அளித்து, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நிறைவேற்றிட முன்வர வேண்டும்.


No comments:

Post a Comment