மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் கோரி ஆளுநர் மாளிகைமுன் தி.மு.க. மாபெரும் ஆர்ப்பாட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 24, 2020

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் கோரி ஆளுநர் மாளிகைமுன் தி.மு.க. மாபெரும் ஆர்ப்பாட்டம்!


சென்னை, அக்.24 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆளுநரையும், அதற்கு அழுத்தம் தரத் தவறி, மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.க. அரசையும் கண்டித்து இன்று (24.10.2020) காலை 10 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மேற்கு மாவட்ட தி.மு. கழகப் பொறுப்பாளர் நே.சிற்றரசு, சென்னை மேற்கு மாவட்ட தி.மு. கழக இளைஞரணி அமைப்பாளர் ராஜா அன்பழகன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு. கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment