குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வருமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 20, 2020

குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வருமாம்!

சொல்கிறார் பா.ஜ.க. தலைவர் நட்டா


 கொல்கத்தா, அக் 20 குடியுரிமை  திருத்தச் சட்டம் விரைவில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.


மேற்கு வங்கத்தில் சமூக அமைப்புகளுடனான கூட்டத்தில் நட்டா பேசியதாவது: 


சொந்த கட்சி நலனுக்காக மம்தா பானர்ஜியின் மேற்கு வங்க அரசு பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுகிறது. ஆனால், பாஜக அனைவரின்  வளர்ச்சிக்காக பணியாற்றும் கட்சியாகும்.


குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பலன்களை அனைவரும் பெறு வீர்கள்.  நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. கரோனா பரவல் காரணமாக இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் தாம தம் ஏற்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல் படுத்தப்படும். மேலும் 2021ஆம் ஆண்டு தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.


 மேற்கு வங்கம் மற்றும் பீகார் தேர்தலில் ஆதாயம் பெறுவதற் காகவே குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவற்றை மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது. இதற்கு இந்தியா மட்டுமின்றி பல் வேறு உலக நாடுகளும் இந்திய அரசின் மதச்சார்பின்மை கேள்விக் குறியாகிறது என்று கண்டனம் தெரிவித்திருந்தன. அதே நேரத்தில் அய்க்கிய நாடுகள் அவையும் அரசின் இந்த இரண்டு திட்டத்திற்கு தங்களின் எதிர்ப்பை காட்டியது,


  டிசம்பரில் இருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்க்கொண்ட இந்தச்சட்டம் தொடர்பாக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்தது, டில்லி, அய்தராபாத் மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் நீண்ட நாள்களாக பெண்கள் போராட்டம் நடத்திக் கொண்டு வந்தனர். போராட்டக்காரர்களை அடக்க ரவுடிகளை களமிறக்கி டில்லி மற்றும் அய்தராபாத் நகரில் கலவரத்தில் ஈடுபட்டனர். டில்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் இந்துத்துவ குண்டர்களால் துப்பாக் கிச்சூட்டிற்கு ஆளாயினர்.  பிறகு கரோனா தொடர்பான ஊரடங்கு காரணமாக நாட்டின் பல இடங் களில் நடந்துவந்த போராட்டம் முடிவிற்கு வந்தது. 


 இதுவரை அமைதியாக இருந்த மத்திய அரசு மீண்டும் நாட்டில் அமைதியைக் குலைக்கும் வகையில் குடியுரிமைச்சட்ட திருத்தம் குறித்து பேச ஆரம்பித்து விட்டது.


No comments:

Post a Comment