சென்னை, அக். 24- கோவிட்-19க்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் புறநகர் மின்சார ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொது போக் குவரத்துகளான பேருந்துகள், பயணிகள் ரயில், மின்சார ரயில் சேவைகள் போன் றவை ரத்து செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறி விக்கப்பட்ட நிலையில் பேருந்துகள் மற் றும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் புறநகர் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment