டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
- உ.பி.மாநிலத்தை காட்டுமிராண்டித்தனமான, யாரும் வசிக்க இயலாத மாநிலம் என்பதைத் தவிர வேறு எப்படி சொன்னாலும் அது இந்தியப் பெண்களை அவமானப்படுத்து வதாகத்தான் இருக்கும். இங்கே வன்முறைகள் நிறுவனமாக் கப்பட்டுள்ளன என எழுத்தாளர் ஷோபா தே தனது கட்டுரை யில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- விஞ்ஞானத்தை இளைஞர்களிடம் வளர்த்திடுவது அவசியம். மேலும் பண்டைய வளமான இந்தியாவில் மூட நம்பிக்கைகள் நிறைந்த மோசமான காலங்கள் என்ற பொய்யை யும் நாம் மறுத்திட வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி வைக்யனிக் மாநாட்டில் உரையாற்றியுள்ளார்.
- ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட தாழ்த்தப் பட்ட பெண்ணின் உறவினர்களை வெளி நபர்கள் யாரும் சந் திக்காத படி, காவல்துறையை நிறுத்தியிருப்பதன் மூலம் உ.பி. அரசு தனது பாதுகாப்பற்றத்தன்மையை வெளிப்படுத்துகிறது என தலையங்க செய்தி கூறுகிறது.
- உ.பி.யில் நடைபெற்ற தாக்குதல் ஒரு குறிப்பிட்ட பெண் மீது அல்ல. இந்தியாவின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது என்ப தாகும் என உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் மேனகா குருசாமி தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- மோடி பயத்திலேயே அரசை நடத்துகிறார். காந்தி வழி நடப்பதாகக் கூறிக் கொண்டு, அவரது கொள்கைகளை தனது நடவடிக்கைகள் மூலம் தகர்க்கிறார் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சாடியுள்ளார்.
தி இந்து:
- உ.பி.யில் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண் மீது நடத்தப்பட்ட பாலியல் படுகொலை, சாதீயம் எந்த அள விற்கு ஊறி இருக்கின்றது என்பதற்கான சாட்சி. அப்பகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் பட்டியிலினப் பிரிவைச் சேர்ந்தராஜூவ் தீலர், பா.ஜ.க. உறுப்பினர். ஆனால் உயர் ஜாதியினரை சந்திக்கும் போது, கூடவே தண்ணீர் பருக டம்ளரை தனியே எடுத்துச் செல்வதை அனைவரும் அறிவர் என எழுத்தாளர் அனுஜ் குமார் உ.பி.யில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட பெண் படுகொலைக் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
இந்துஸ்தான் டைம்ஸ்:
- ஹத்ராஸ் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண் உறவினர்களைச் சந்திக்க முற்பட்ட திரிணாமுல் காங் கிரஸ் எம்.பி. டிரைக் பிரையன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, தள்ளி விடப்பட்டார்.
- குடந்தை கருணா
3.10.2020
No comments:
Post a Comment