ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது மத்திய அரசு : உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. பிரமாணப் பத்திரம் தாக்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது மத்திய அரசு : உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. பிரமாணப் பத்திரம் தாக்கல்


புதுடில்லி, அக்.22 ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு மாறுபட்ட வாதங்களை முன்வைத்து,  இருவேடமாக நடந்து கொள்கிறது என உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாரர் தரப்பில் திமுக மூத்த வழக்குரைஞர் வில்சன் நேற்று  (21.10.2020) எழுத்துப்பூர்வ  பிர மாணப் பத்திரத்தை தாக்கல் செய் துள்ளார்.


மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50  சதவீத இடஒதுக்கீடு வழங்கும் உத் தரவை இந்த ஆண்டே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு மற்றும் அதிமுக தரப்பில் உச்ச  நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே போல், இந்த விவகாரத்தில் மருத்துவர் டி.ஜி.பாபு தரப்பில் கேவியட் மனு தாக்கல்  செய்யப்பட்டது.


ஆனால், தமிழகத்திற்கு மட்டும் தற்போது தனிப்பட்ட முறையில் இடஒதுக்கீடு வழங்கினால் அது மற்ற மாநிலங்களில் சட்ட சிக்கல்களை உருவாக்கும்  என மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான தீர்ப்பு கடந்த 15ஆம் தேதி ஒத்தி வைத்ததோடு, இந்த விவகாரத்தில் மனுதாரர்,  எதிர்மனுதாரர் என அனைவரும் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் (நேற்று முன்தினம்) எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என  உத்தரவிட்டிருந்தது. இந் நிலையில் கேவியட் மனுதாரர் தரப்பில் திமுக மூத்த வழக்குரைஞர் வில்சன் மேற்கண்ட வழக்கில் எழுத்துப்பூர்வ வாதம்  கொண்ட பிரமாணப் பத்திரத்தை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், “இடஒதுக்கீடு விவகாரத்தை பொறுத்தமட்டில் அகில  இந்திய இடஒதுக்கீடு என்பது நிரந்தரமான ஒன்று கிடையாது.


அது தற்காலிகமானதுதான் என்று உச்ச நீதிமன்றம் பல ஆண்டு களுக்கு முன்னதாகவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் பிராந்திய  மருத்துவ அறிவியல் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது. ஆனால், கடந்த 34 ஆண்டுகளாக இதனை அமைக்காமல் மத்திய  அரசு இழுத்தடிப்பு செய்து வருகிறது. இதனால் மாநில அரசின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு தடுப்பதோடு மட்டுமில்லாமல் அதனை  பறிக்கவும் செய்கிறது.  குறிப்பாக இடஒதுக்கீட்டு சட்டத்தை மாநில அரசு இயற்ற அனைத்து அதிகாரங்களும் உண்டு என சவுரவ் சவுத்ரி என்பவர்  வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.4 ஆண்டு களாக ஓபிசி பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்காமல்  மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.


மேலும் இதுகுறித்து நாடா ளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு கூட ஓபிசிக்கு இந் தாண்டே 50சதவீத இடஒதுக்கீடு  வழங்குவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதியளித்தார். மேலும் அந்தந்த மாநில அரசுகள்தான்  இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண் டுமே  தவிர, இதில் மத்திய அரசின் தலையீடு என்பது இருக்கக்கூடாது. மேலும் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய  உருவாக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குழுவில் சுகாதாரத் துறை செயலாளர்களும் இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டது. ஆனால் அதன்படி  தற்போது குழு அமைக்கப்பட்டவில்லை. இது நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானதாகும்.


மத்திய அரசின் இந்த செயல்பாடுகள் அனைத்தும் இந்திய அரசியல் சாசனம் மற்றும் 1993ஆம் ஆண்டு தமிழக அரசு இயற்றிய சட்டம் ஆகிய  இரண்டுக்கும் எதி ரானதாகும். இதில் இடஒதுக்கீட்டு விவகாரத்தில் ஓபிசிக்கு 50 சதவீதம் இந்த ஆண்டே வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில்  தெரிவித்து விட்டு தற்போது நீதிமன்ற விசா ரணைகளின் போது அதற்கு எதிராக வேறுபட்ட வாதங்களை முன்வைத்து இருவேடமாக மத்திய அரசு  நடந்து கொண்டுள்ளது. அதனால் ஓபிசிக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர் பாக ஒரு விரிவான அறிக்கையை அக்டோபர் 27ஆம் தேதிக்குள் தாக் கல்  செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.


 


No comments:

Post a Comment