சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் குழு அமைக்கப்படவில்லை!
உச்சநீதிமன்ற வாதத்தில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி. குற்றச்சாட்டு
புதுடில்லி,அக்.17, "மருத்துவப் படிப்புக்கான அகில இந்தியத் தொகுப்பில் இதர பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை இந்தக் கல்வியாண்டிலேயே செயல்படுத்திட வேண்டும்'' என, இது தொடர்பான வழக் கில் தி.மு.கழகத்தின் சார்பில் ஆஜ ராகி வாதிட்ட மூத்த வழக் குரைஞர் பி.வில்சன் எம்.பி குறிப்பிட்டார்.
மாநிலங்கள் அகில இந்திய தொகுப் பிற்கு ஒப்படைத்த மருத்துவ இடங்களில், தமிழ கத்தைப் பொருத்தவரை, தமிழ் நாடு இட ஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் இதர பிற் படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத் தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது.
இந்த வழக்கில் மூத்த வழக் குரைஞர் பி.வில்சன் ஆஜராகி வாதாடினார்.
தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய தொகுப்பில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு இடஒதுக்கீடு உள்ளது என்பதை உறுதி செய்து அதனை செயல்படுத்த உயர் மட்டக் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப் படையில் குழு அமைத்து, தமிழ் நாடு இட ஒதுக்கீடு சட்டத் தின்படி இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50விழுக்காடு இட ஒதுக்கீட்டை, இந்தக் கல்வியாண்டே செயல்படுத்த வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார் பில் வலியுறுத்தப்பட்டது.
இது சம்பந்தமான மனுக்கள் நேற்று இந்திய உச்ச நீதி மன்றத்தில் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி வாதா டினார்.
இன்றைய விசாரணையின் போது மத்திய அரசின் சார்பாக பதிலுரை தாக்கல் செய்யப்பட்டு, அதில் சென்னை உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு வழங்கப் பிறப் பித்த உத்தரவினை இந்தக் கல்வி ஆண்டு 2020-_2021இல் செயல் படுத்த முடியாது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் பல்பீர் சிங் மற்றும் தேசிய மருத்துவ குழுவின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கவுரவ சிங் ஆகியோர், அகில இந்தியத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப் பட்ட இடங்களில் இடஒதுக்கீட் டினை இந்த ஆண்டு செயல் படுத்த முடியாது என்பதை தெரிவித்தனர்.
மாநிலங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கும் இடங்கள் குறித்த விளக்கத்தை இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டறிந்தனர்.
வாதத்தின்போது இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கான இட ஒதுக்கீட்டி னைப் பொருத்தவரை தமிழ் நாடு சட்டத்தின் அடிப் படையில் கோரிக்கை வைக்கும் பொழுது அது எவ்வாறு தமிழக மாணவர்களுக்கு பயனுள் ளதாக இருக்கிறது என்ற விவ ரத்தை நீதிபதிகள் கேட்டார்கள்.
அதற்கு பதிலளித்த மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் மாண வர்கள் சேர்க்கைக்காக விண் ணப்பிக்கும் பொழுது அந்த விண்ணப்பத்தில் குடியிருப்பு (Domicile) குறித்த தகவலும் கேட்கப்படுகின்றன. அவ்வாறு கேட்கப்படும்பொழுது, தமிழக மாணவர்கள் தமிழகத்தில் அமைந்துள்ள கல்லூரிகளில் படிப்பதற்கு தங்களது முன்னு ரிமையை குறிப்பிடுகின்றனர். அதே நேரத்தில் வெளிமாநிலத் தில் படிப்பதற்கான வாய்ப்பும் அதில் வழங்கப்படுகிறது. இதை யெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக இட ஒதுக்கீடு சட்டத் தின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை இந்த இடங்களில் பெற முடியும்.
ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி குழு அமைக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசின் மக்கள் நல் வாழ்வுத்துறை செயலாளரோ அல்லது மக்கள் நல்வாழ்வுத் துறையின் பொது இயக்குநரோ இந்தக் குழுவில் நியமிக்கப்பட வில்லை .
தமிழ்நாடு மாநிலம் அகில இந்திய தொகுப்பிற்கு ஒப் படைத்த இடங்களில், தமிழ் நாடு அரசின் இட ஒதுக்கீடு சட்டத்தின்படி 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை இந்த ஆண்டு வழங்குவதே சரியான தாக இருக்கும். இதற்கு எந்த சட்டக் சிக்கலும் கிடையாது, - என்று மூத்த வழக்குரைஞர் வில்சன் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகேஸ்வரராவ், மூத்த வழக்குரைஞர் வில்சன் அவர் களைப் பார்த்து “நீங்கள் கூறுவது போல் இட ஒதுக்கீடு தமிழ் நாட்டிற்கு வழங்கப்பட்டால், அதேபோல அனைத்து மாநி லங்களுக்கு வழங்க வேண்டியிருக்குமே; அதனுடைய விளைவு அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுமே" என்று வினவிய பொழுது; மூத்த வழக்குரைஞர் வில்சன் அவர்கள், அதற்கு “ஆமாம்'' என்று பதில் அளித் தார். இதனைக் கேட்ட நீதி பதிகள் “நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் இந் தியாவில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட மாணவர் களுடைய நலனைப் பாதுகாக்க விரும்புகிறீர்கள்'' என்று ஒரு கருத் தினை வெளிப்படுத்தினார்கள்.
அதேநேரத்தில் மாநிலத்தின் சார்பாக ஆஜரான வழக் குரைஞர் கிரி 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை இந்த ஆண்டு வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து வழக்கை இடைக்காலத் தீர்ப் புக்காக ஒத்திவைத்த உச்சநீதி மன்ற நீதிபதிகள், வருகின்ற செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்துப் பூர்வமான வாதங் களைத் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment