சென்னை, அக்.3 ரயில்வே ஊழியர்களுக்காக இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்களில் அங்கீ கரிக்கப்பட்ட அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியர்கள் அக். 5-ஆம் தேதி முதல் பயணிக்க அனுமதி வழங்கப்பட் டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: சென்னை கடற்கரை _ -செங்கல்பட்டு வழித் தடத்தில் 4 சிறப்பு ரயில்கள், சென்னை மூர்மார்க்கெட் வளாகம்- _அரக்கோணம் வழித்தடத்தில் 14 சிறப்பு ரயில்கள், சென்னை மூர் மார்க்கெட் வளாகம்- _ கும்மிடிப் பூண்டி வழித்தடத்தில் 2 சிறப்பு ரயில்கள், செங்கல்பட்டு _ -சூலூர்ப் பேட்டை வழித்தடத்தில் 4 சிறப்பு ரயில்கள் உள்பட மொத்தம் 30 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில் சேவைகள் குறித்த விவரங்கள் அனைத்து ரயில் நிலையங்களில் ஒட்டப்படும்.
சென்னை புறநகர் சிறப்பு ரயில் களில் அத்தியாவசியப் பணிகளுக் காகச் செல்லும் அரசு ஊழியர் களுக்கு அனுமதிச்சான்று வழங்க தனி அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது. சிறப்பு அனுமதி வழங்கும் சான்றிதழில், பயணம் செய்யும் அரசு ஊழியரின் பெயர், பதவி, துறை/ அலுவலகம் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட அசல் சான்றிதழோடு அரசு ஊழியர் தனது புகைப்படத்தோடு கூடிய அடையாள அட்டையை ரயில்வேயிடம் காண்பித்த பின்னரே பயணச்சீட்டுடன் ரயில்களில் பயணிக்க முடியும்.
ரயில்வே காவல்துறையினர் ரயில் நிலைய நுழைவாயிலிலும் நடைமேடைகளில் பயணச்சீட்டு பரிசோதகர்களும் பயணிகளிடம் சோதனை மேற்கொள்வர். குறிப் பிட்ட கால இடைவெளிகளில் ரயில்கள் கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்யப்படும்.
தமிழக அரசு நியமித்துள்ள அதிகாரி மூலமாக, வழங்கப்பட் டிருக்கும் அனுமதிச் சான்றிதழின் அடிப்படையில் அரசு ஊழியர் களுக்கு ரயில்களில் மாதாந்திர, தினசரி பயணச் சீட்டுகள் அனைத்து புறநகர் ரயில் நிலைய கவுன்ட் டர்களில் வழங்கப்படும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கவுன்ட் டர்கள் இருக்கும் ரயில் நிலை யங்களில் ஒரு கவுன்ட்டர் மாதாந்திர பயணச்சீட்டு வழங்கும் வகையில் செயல்படும். ஒரே ஒரு கவுன்ட்டர் இருக்கும் ரயில் நிலையங்களில் சாதாரண நேரங்களில் மட்டுமே மாதாந்திர பயணச்சீட்டு வழங்கப் படும். கூட்டநெரிசல் மிகுந்த நேரங் களில் சாதாரண பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.
ஏற்கெனவே, சீசன் பயணச் சீட்டுகளை வைத்திருப்போர் புற நகர் சேவைகள் நிறுத்தப்படும் போது இழந்த நாள்களின் அள விற்கு அவர்களின் சீசன் பயணச் சீட்டுகள் செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment