மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள் (5.10.2020)
தந்தை பெரியார் வாழ்க!
அன்னை மணியம்மையார் வாழ்க!
தமிழர் தலைவர் வீரமணி வாழ்க!
கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்!
பாலியல் வன்கொடுமைகளைக் கண்டிக்கிறோம்!
நீதிவேண்டும் நீதிவேண்டும்!
வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட
பெண்களுக்கு நீதி வேண்டும்!
வெட்கம் வெட்கம்!
21-ஆம் நூற்றாண்டிலும்
பெண்களுக்கு எதிரான கொடுமைகளா?
பள்ளி மாணவிக்கும் பாலியல் வன்முறை
பச்சைக் குழந்தைக்கும் பாலியல் வன்முறை!
பாட்டிக்கும் பாலியல் வன்முறை!
அய்யய்யோ... வெட்கக் கேடு!
மனித சமூகத்துக்கு வெட்கக் கேடு!
உத்தரப் பிரதேசத்தில் நடப்பது
மக்களாட்சியா? மனுதர்ம ஆட்சியா?
மக்களாட்சியா? காட்டாட்சியா?
யோகி நடத்தும் ராமராஜ்ஜியம்
சனாதனத்தின் சாம்ராஜ்ஜியம்
பதவி விலகு பதவி விலகு!
உ.பி.யில் நடக்கும் காவி அரசே
பதவி விலகு பதவி விலகு!
மோடி நடத்தும் ராமராஜ்ஜியம்
ஆரியக் கூட்டத்தின் சாம்ராஜ்ஜியம்
பாலியல் வன்கொடுமைகள்
பெண்கள் பிரச்சினை மட்டும் அல்ல...
மனித குலத்தின் பிரச்சினை!
பெண் என்பவள் புனிதமல்ல...
பெண் என்பவள் கடவுள் அல்ல...
பெண் என்பவள் கவுரவம் அல்ல...
பெண்கள் என்போர் சக உயிரே!
கரண்டியை வீசி எறி!
கராத்தே கற்றுக் கொள்!
சிகை வளர்ப்பை விட்டு ஒழி!
சிலம்பம் கற்றுக் கொள்!
கல்விக் கூடங்கள் அனைத்திலும்
தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவிப்போம்!
மத்திய அரசே! மாநில அரசே!
பெண்களின் தற்காப்புக்காக
துப்பாக்கி அனுமதி வழங்கிடு!
எத்தனை எத்தனை வன்கொடுமை!
தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு
தொடர்ந்து நிகழும் வன்கொடுமை!
ஜாதியத்தின் பெயராலே
எத்தனை எத்தனை வன்கொடுமை!
பாலியல் ரீதியில் வன்கொடுமை!
பெற்றோரே! பெற்றோரே!
பெண் குழந்தைகள் வளர்ப்பை விட
ஆண்கள் வளர்ப்பில் அக்கறை செலுத்துவீர்!
பெண்களைச் சம உயிராய் மதிக்கும்
பெண்களைச் சக உயிராய் மதிக்கும்
ஆண் பிள்ளைகளை வளர்த்தெடுப்போம்!
பெண்ணே பெண்ணே போராடு!
பெரியார் கொள்கை துணையோடு!
- திராவிடர் கழக மகளிரணி,
திராவிட மகளிர் பாசறை
No comments:
Post a Comment