மயிலாடுதுறை, அக். 14- மயிலாடுதுறை மாவட் டம் மன்னம்பந்தல் ஊராட்சி மன்றத் தலை வர் பிரியா பெரியசாமி (23). கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், பின்னர் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், துணைத் தலை வர்மீது குற்றம்சாட்டி 12.10.2020 அன்று மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில், தன் தந்தை பெரிய சாமியுடன் அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:
எனது ஊராட்சியில் பஞ்சாயத்து அலுவலக தளவாட பொருட்கள் வாங் கப்பட்டன. அதில் ஊராட்சித் தலை வருக்கு ரோலிங் சேர் புதிதாக வாங்கப் பட்டது. அதில் என்னை அமர விடாமல் ஊராட்சி துணைத் தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, சாதாரண நாற்காலியில் தான் அமர வேண்டும். இந்த சேரில் அமர உனக்கு என்ன தகுதி இருக்கு என்று ஜாதியைக் குறிப்பிட்டு தகராறு செய் தனர்.
ஊராட்சியில் நடைபெறும் பராம ரிப்பு வேலைகளுக்கு கமிஷன் கொடுத் தால் மட்டுமே பில்லில் கையெழுத்துப் போடுவேன் என்று கூறி துணைத் தலைவர் எந்த பில்லிலும் கையெழுத்து போடவில்லை. இதனால் ஊராட்சி வேலை கள் பாதிக்கப்படுகின்றன.
இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலு வலர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுகுறித்து கடந்த 6ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய ஆணை யரிடம் புகார் மனு கொடுத்தும் ஆணை யர் சரவணன், இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்காததை கண்டித்தே தர் ணாவில் ஈடுபட்டேன் என்றார்.
பின்னர், மயிலாடுதுறை காவல் நிலை யத்துக்கு சென்ற அவர், மன்னம்பந்தல் ஊராட்சி துணைத் தலைவர் அமலா, அவரது கணவர் ராஜகோபால் ஆகி யோர் மீது புகார் அளித்தார்.
No comments:
Post a Comment