தமிழகத்திலிருந்து புறப்பட்ட திரும்பிப்போ மோடி; பீகாரிலும் எதிரொலிக்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 23, 2020

தமிழகத்திலிருந்து புறப்பட்ட திரும்பிப்போ மோடி; பீகாரிலும் எதிரொலிக்கிறது!


பாட்னா, அக் 23  'திரும்பிப் போ மோடி' என்ற சொல் முதல் முதலில் தமிழகத்தில் இருந்து கிளம்பியது, பீகார் தேர்தல் பிரச்சாரம் செய்யச் செல்லும் மோடிக்கு எதிராக முதல் முதலாக வடமாநிலத்தில் எதிரொ லிக்கத் துவங்கியுள்ளது


நரேந்திர மோடி 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க தமிழகம் வந்தார்.அப்போது தமிழக நலனுக்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்து செயல்பட்டுவரும்  நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் # GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண் டாகியது.



அதே போல் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு   மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டு விழா விற்கு வந்தார். மீண்டும் அவர் வரு கைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ் டாக் ட்ரெண்டாகி வருகிறது.


2019-ஆம் ஆண்டு மாமல்லபுரத் தில் சீன அதிபருடனான சந்திப்பின் போதும் 'மோடியே திரும்பிப்போ' எதிரொலித்தது,


  நாடு முழுவதும் பிரபலமானவர் என்ற பிம்பத்தை ஊடகங்கள் மூலம் உருவாக்கி வைத்த மோடிக்கு தமி ழகத்தில் இருந்து வந்த 'மோடியே திரும்பிப்போ' என்ற வாசகம் பெரும் அவமானகரமான ஒன்றாகவே பார்க்கப்பட்டது,


தமிழகத்தை தொடர்ந்து கருநாடகா மற்றும் ஆந்திராவிலும் 'மோடியே திரும்பிப்போ' என்ற வாசகம் தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிரொலித்தது, இந்த நிலை யில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பீகார் செல்லும் மோடிக்கு எதிராக தமிழ கத்திலிருந்து கிளம்பிய 'மோடியே திரும்பிப்போ' வாசகம்  மீண்டும் அங்கே எதிரொளி(லி)க்கத் துவக்கியுள்ளது.


No comments:

Post a Comment