சீரழிந்து போயுள்ள நாட்டின் பொருளாதார நிலையை புதுப்பித்து மேம்படுத்துதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 3, 2020

சீரழிந்து போயுள்ள நாட்டின் பொருளாதார நிலையை புதுப்பித்து மேம்படுத்துதல்

(இதன் முதல் படி, நாட்டின் பொருளாதார நிலையில் ஒரு பிரச்சினை உள்ளது என்பதை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதுதான்,)


கவுரவ் வல்லப்


ஒரு சில ஆழ்ந்த புள்ளி விவரங்களை சுட்டிக் காட்டி புலம்பக் கூடிய அளவில் மிகப் பெரிய அளவில் இந்திய பொருளாதார நிலை சீரழிந்துள்ளது. 2020-2021 காலாண்டுக்கான ஜி.டி.பி. புள்ளி விவரங்களின் பகுத்தாய்வு நியாயமானதாகவும், சமநிலை கொண்டதாகவும் இருப்பது அவசியமா னது. ஊக்கம் அளிக்கும் முடிவுகளை எந்த அற் புதத்தாலும் கொண்டு வர இயலாது என்ற போதிலும், பொருளாதார வளர்ச்சி பற்றிய செயல்பாடுகள் எதிர் பார்ப்புகளை விட மிகமிகக் குறைவான அளவி லேயே இருக்கின்றன. பொருளாதார அளவில் மிகமிக மோசமாக பாதிக்கப்பட்ட முறைசாரா துறைக் கணக்குகள் இவற்றில் சேர்க்கப்படுவதில்லை என்பதால், முதல் காலாண்டுக்கான எண்ணிக்கை மேலும் குறைவான அளவிலேயே இருக்கும். நான்கு மிக முக்கியமான அடையாளங்கள்


ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகு முறையை மேற்கொள்வதற்கு, அத்தகையதொரு பிரச்சினை உண்மையிலேயே இருக்கிறது என்று அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதுதான் முதல் படியா கும். அவ்வாறு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்ற நிலையிலேயே வாழ்வது, அத்தகைய பிரச் சினை இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்வதை தாமதப்படுத்தக் கூடுமேயன்றி, அதனால் ஏற்படும் முடிவுகளை தாமதப்படுத்தப் போவதில்லை. இப் போது மிகச் சரியாக நடைபெற்று வருவது இதுதான் என்று நான் அஞ்சுகிறேன். கடந்த 18 மாதங்களுக்கும் அதற்கும் மேலாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் முடக்கத்திற்கான அடையாளங்கள் கண்கூடா கத் தெரிகின்றன.  2018-19 ஆம் ஆண்டில் நான்காம் காலாண்டைத் தவிர,  காலாண்டு ஜி.டி.பி. வளர்ச்சி புள்ளி விவரங்கள், கடந்த  9 காலாண்டுகளாக வீழ்ச்சி அடைந்து கொண்டுதான் வந்துள்ளன. அதற்கான பல முக்கியமான ஆதாரங்களில் நான்கு மிகமிக முக்கியமான அடையாளங்கள் கடந்த 18 மாதங்களாக என்னைக் கவலைப்பட வைத்து வருகின்றன.


முதலாவதாக, ஜி.டி.பி.யில் உள்ள மொத்த நிலை வைப்புத் தொகை வடிவமைப்பு,  2014-19 ஆண்டு களுக்கு இடையே 2018 ஆம் ஆண்டு நீங்கலாக மற்ற ஆண்டுகளில் 30.1. விழுக்காட்டில் இருந்து 27 . 4 விழுக்காட்டிற்கு தொடர்ந்து சரிந்தே வந்துள்ளது. சராசரி தேவையை உயர்த்தவும், எதிர்காலத் தேவை களை எதிர்கொள்ள இயன்ற அளவிலும், மிகமிக அதிக அளவிலான முதலீடுகளை வளர்ந்து வரும் நாடுகள் பொதுவாகவே செய்யும்.


இரண்டாவதாக,  இந்திய நகர்ப்புற நுகர்வோரின் தேவை. மிகச் சரியாக ஓராண்டுக்கு முன்பு,  வீட்டு உபயோகத்துக்கான கார்களின் விற்பனை தொடர்ந்து 9 மாதங்கள் குறைந்து கொண்டே வந்து 2019 ஆம் ஆண்டில் 41 . 09 விழுக்காடு என்ற அளவில் குறைந்து நின்றது; வியாபாரத்திற்கான வாகனங்களின் விற்பனையும் கூட 39 விழுக்காடு அளவில் குறைந்து போனது. கார் மற்றும் இதர மோட்டார் வாகனங்கள் உற்பத்தித் தொழிலின் செயல்பாடுகள் எந்த அளவுக்குக் குறைந்து போயுள்ளன என்பதை இவை சுட்டிக் காட்டுகின்றன.


மூன்றாவதாக,  கிராமப்புற பொருளாதாரத்தில் நிலவிய பலவீனமான எப்.எம்.சி.ஜி, தேவை. உண்மையான கிராமப்புற சராசரி கூலி வளர்ச்சி 13 முதல் 15 ஆம் அய்ந்தாண்டு திட்ட காலத்தில் 11 . 18 விழுக்காட்டில் இருந்து, 16 முதல் 18 ஆம் அய்ந் தாண்டு திட்ட காலத்தில்  வெறும் 0 . 45 விழுக்காட் டிற்கு வீழ்ச்சி அடைந்தது. நுகர்வோரின் நம்பிக்கை,  மிகமிக மோசமாக பாதிக்கப்பட்டது தேவையின் மந்த நிலைக்கு வழி வகுத்ததில்  வியப்பேதும் இருக்க முடியாது.


தேவையில் ஒரு பிரச்சினை இருக்கிறது என் பதை மட்டுமல்லாமல், தேவைக்கு ஏற்ப வினியோ கம் செய்வதற்குத் தயாராக இருப்பதிலும் பிரச்சினை உள்ளது என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.  பிரச் சினை ஒன்று தீர்க்கப்படுவதற்காக நம் முன் நிற்கிறது என்பதை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டு,  அதைத் தீர்த்து மறுபடியும் புத்துயிர் அளிப்பதற்கான ஒரு செயல் திட்டத்தைக் கையில் வைத்திருக்க வேண் டிய ஒரு நேரத்தில், இசை நாற்காலி போட்டி விளையாட்டு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது; ஆனால் இந்த விளையாட்டில் நாற்காலியில் உட் காருவதற்கு எவர் ஒருவரும் விரும்பவில்லை. சொந்தக் கார்களை வைத்துக் கொள்வதை விட வாடகைக் கார்களைப் பயன்படுத்துவதே சவுகரிய மானது என்று கருதிய நகர்ப்புற பணவசதி படைத் தவர்களை அமைச்சர்கள் குற்றம் சாட்டிக் கொண் டிருந்தார்கள். மிகப் பெரிய அளவில் வசூலை அள்ளித் தந்த திரைப்படங்கள் ஆரோக்கியமான பொருளாதார நிலைக்கு ஒரு சான்று என்று சுட்டிக் காட்டப்பட்டது. அதற்கு முன்பு வரை நாட்டின் பொருளாதார நிலைக்கு ஜவஹர்லால் நேரு குற்றம் சாட்டப்பட்டார். இப்போதுள்ள பொருளாதார நிலை கடவுளின் செயல் என்று கூறப்படுகிறது. மோடியின் முதல் மற்றும் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அவரால் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட மோசமான செயல்திட்டங்களே இவற்றுக்கான காரணங்கள் என்பதை ஒப்புக் கொள்வதற்கு எவர் ஒருவரும் தயாராக இல்லை.


பொருளாதார நிலை மேம்பாட்டுக்கான பரிந்து ரைகளை அளிப்பதற்கு முன்னர், நாம் இன்று எந்த நிலையில் நிற்கிறோம் என்பதை முதலில் பகுத் தாய்ந்து கொள்வோம். நகர்ப்புற குடும்பங்களின் முதலீடு செய்யும் பசியும், நுகர்வின் அளவும் குறைந்து போயுள்ளன. எட்டு மிகமிக முக்கியமான துறைகளின் செயல்பாடுகள் குறுகிப் போயின. நுகர்வோரின் தேவைகள் அதிகரித்தாலும் கூட, அவர்களது தேவைகளை நிறைவு செய்யும் நிலை யில் நாம் இருக்கப் போவதில்லை. அரசின் பெய ரைக் கடைசியில் காப்பாற்றப்போவது கிராமப்புற பொருளாதார நிலைதான். கிராமப்புற நுகர்வோரின் தேவை, நகர்ப்புற நுகர்வோரின் தேவையை விட மேலானதாக இருக்கிறது. இதற்குக் காரணம், தேவைக்கு அதிகமாக பெய்த மழையும்,  கிராமப்புற மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் வழியில்  செலவிடுவதற்காகக் கிடைத்த பணமும் தான்.


நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான வழி முறைகள்


மூன்று முக்கியமான விஷயங்களைப் பற்றிய கொள்கைகளை வடிவமைப்பதிலும், நடைமுறை மிக நீண்ட, ஆழமானதொரு சிந்தனை செலுத்தப்பட வேண்டும். முதலாவது நகர்ப்புற பொருளாதாரம்  தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். முதலீடுகள் வளர வேண்டும்.   முதலீட்டு வடிவமைப் பில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 24 விழுக்காடு மட்டுமே உள்ளது என்ப தால், இதற்கு தனிப்பட்டவர்கள் மற்றும் குடும்பங் களின் முதலீடுகள் திரட்டப்படும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும். எனவே, அரசு செல விடுவது மட்டுமே இதற்கு உதவாது. கூடுதலான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுதான் இப் போதைய தேவையாகும். இரண்டாவதாக, கிராமப் புற வளர்ச்சி மாதிரிகள் நீடித்து நிலைத்திருப்பவையாக இருப்பது அவசியமாகும். செலவழிக்கப்படுகின்ற வருவாய் உயர்வு குறுகியதொரு காலத்துக்கு பயன் அளிக்கக் கூடும். கிராமப்புற அளவில் வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதன் மூலமும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை பலப்படுத்துவதன் மூலமும் செலவழிப்பதற்காக ஈட்டப்படும் வருவாய் நீடித்து இருப்பதாக இருக்க வேண்டும். மூன்றாவதாக,  முக்கியமான துறைகளின் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் கட்டமைப்பு களுக்கு செலவிடப்படுவதும், கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு செலவிடப்படு வதும் மிகப் பெரிய அளவில் அதிகப் படுத்தப்பட வேண்டும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்துவது,  கிராமப்புற தொழிலாளர்களை மறுபடியும் நகரங்களுக்குக் குடி பெயருவதற்கு ஊக்கத்தையும் ஆர்வத்தையும் அளிக்கும்.


இறுதியாக,  தேவைக்கு அதிகமாக  பொருள் களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி, வினியோகப் பிரச்சினைகளை சீர் செய்ய வேண்டும். சுருங்கி வந்து கொண்டிருக்கும் எட்டு துறைகள் மறுபடியும் அதன் செயல்பாட்டு மற்றும் உற்பத்தித்  திறனுக்குத் திரும்புவதற்கு கட்டமைப்பு சீர்திருத் தங்கள் மேற்கொள்ளப்படுவது மிகவும் அவசிய மாகும்.


நன்றி: 'தி இந்து', 08-09-2020


தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.


No comments:

Post a Comment