நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையத்தில் ரூ. 48668 க்கு இயக்க நூல்கள் விற்பனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 17, 2020

நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையத்தில் ரூ. 48668 க்கு இயக்க நூல்கள் விற்பனை


கன்னியாகுமரி, அக். 17- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நாகர்கோவிலில் தொடங்கிவைக்கப்பட்ட பெரியார் புத்தக நிலையத் தில் இயக்க நூல்கள் விற்பனை  சிறப்பாக நடைபெற்று வருகிறது.


கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் அல்லாமல் அருகாமை மாவட்டத்தில் உள்ளவர்களும் இங்கு வந்து நூல்களை வாங்கி செல்கின்றனர். அது போல இணையதளம் மூலமாகவும் விற் பனை நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை கரோனா காலகட்டத்தில் கூட நமது நாகர்கோவில் புத்தக நிலையத்தில் ரூ. 48,668க்கு இயக்க நூல்களை விற்பனை செய்யப் பட்டுள்ளதுது. அந்த அளவுக்கு இளைஞர்கள் மாணவர்கள் மத்தி யில் பெரியார் கொள்கைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. ஆராய்ச்சி மாணவர் பிரதீஷ்ராஜா நேற்று முன்தினம் மட்டும் ரூ. 1300க்கு இயக்க நூல்களை வாங்கிச்சென்றார்.


 


தந்தை பெரியாரின் நூல்களை வழங்கி


பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்



செண்பகராமன்புதூர், அக். 17- கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் செண்பகராமன்புதூர் பகுதியில் பொதுமக் களுக்கு தந்தை பெரியார் அவர்களின் நூல்களை வழங்கி விழிப் புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.


திராவிடர் கழக மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ் தலைமை தாங்கினார். திராவிடர் கழக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். திராவிடர் கழக மாவட்ட இளைஞர் அணி தலைவர் இரா. இராஜேஸ், செயலாளர் அலெக்ஸாண்டர், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக தலைவர் குமாரதாஸ், மாநகர கழக துணைத் தலைவர் கவிஞர் ஹ.செய்க் முகமது நகர இளைஞர் அணி அமைப்பாளர் மகேஷ் கழகத்தோழர்கள் ஷெர்பின், இசைக் கண்ணன், டோனி, தமிழரசன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


 


கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்



நாகர்கோவில், அக். 17- நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர்  கழகம் சார்பில்  பெரியார் பிறந்தநாள் விழா  சிறப்பு கருத்தரங்கம் 27.9.2020 அன்று நடைபெற்றது. 


பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு  தலைமை தாங்கினார்.  கழக மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ் முன் னிலை வகித்தார். கழக மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் தொடக்கவுரை ஆற்றினார். விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழனி சங்கர நாராயணன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சுதா பழனி, இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன், மாநகர துணைத் தலைவர் கவிஞர் செய்க் முகமது மாவட்ட கழக இளை ஞர் அணி செயலாளர் அலெக்ஸாண்டர், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் தாஸ், விசிக பொறுப்பாளர் தாஸ், கழகத் தோழர்கள் தமிழரசன், டேனி மற்றும் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தூத்துக்குடி மாவட்டத் தலைவர் தி.ப.பெரியாரடியான், கன்னியா குமரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார், மதுரை மண்டல கழக தலைவர் பவுன்ராசா, திராவிடர் கழகத்தோழர்கள் திங்கள் நகர் பெ. சுப்பிரமணியம், தோவாளை சுப்பிரமணியம், இட லாக்குடி தாமஸ், மேக்காமண்டபம் டேவிட் லாசரஸ், நாகர்கோவில் பி.எஸ். ராஜன் மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தனின் தந்தையார் தா.கோவில் பிள்ளை ஆகியோர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வது, திருச்சியில்  பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க காவல்துறையைக் கேட்டுக்கொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


No comments:

Post a Comment