டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
- தற்போது பலம் மிக்க பிரதமராக திகழும் மோடி ஆட்சிக்கு எதிராக வலுமிக்க ஒரு நிறுவனமாக மாநிலங்களில் உள்ள எதிர்க் கட்சிகள் இணைந்து செயல்பட்டால்தான், ஜன நாயகத்தைக் காப்பாற்ற முடியும் என பொருளாதார ஆலோசகர் சஞ்சிவன் சஹானி தெரிவித்துள்ளார்.
- பதினான்கு மாதம் வீட்டுக்காவலில் இருந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான மெகபூபா முக்தி, விடுதலை செய்யப்பட்டார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- பீகார் மாநில தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி எட்டு பேரணிகளில் கலந்து கொள்கிறார். இதனை சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்காக 10,000 பேர் மற்றும் நான்கு லட்சம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது.
- இந்தியாவில் தற்போது பேச்சு சுதந்திரம் வெகுவாக பாதித்துள்ளது. அரசை எதிர்த்து கருத்து சொல்வது தேசத் துரோகம் என்று சொல்லப்படுகிறது என உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மதன் பி.லோகூர் கருத்து தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- உ.பி. ஹத்ராஸ் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் மரணத்தில், அவரது உடல் எரிக்கப்பட்டது, மனித உரிமைக்கு எதிரான செயல் என லக்னோ உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி அவதூறு பேசுவது குறித்து அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
- யானை மீது அமர்ந்து யோகா செய்த பதஞ்சலி புகழ் பாபா ராம்தேவ் கீழே விழுந்து முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.
- வங்கிப் பணிகளுக்கான தேர்வு விளம்பரத்தில் ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்க்கான இட ஒதுக்கீடு சதவீதம், உயர்ஜாதி நலிந்த பிரிவினர்க்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டின் காரணமாக குறைக்கப் பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தி டெலிகிராப்:
- மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று காரணமாக கோவில்கள் இன்னமும் திறக்கப்படாமல் இருப்பது குறித்து, அம்மாநில ஆளுநர் கோஷியாரி, முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு எழுதிய கடிதத்தில், எப்போது மதசார்பின்மைக்கு மாறினீர்கள் என்று குறிப்பிட்டது சர்ச் சையைக் கிளப்பியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் மதசார்பின்மை முக்கிய கூறாக உள்ளது. ஆளுநர் அதன் மீது உறுதி மொழி எடுத்ததை மறந்துவிட்டாரா? என உத்தவ் பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்து, தேசிய காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
- ஜி.எஸ்.டி. வரி பங்கீட்டில் மாநிலங்களுக்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி ஆளும் மாநில முதல்வர் களின் நியாயமான குற்றச்சாட்டுக்கு நிதி அமைச்சர் உரிய பதில் அளிக்கவில்லை. இந்த மாநிலங்கள் விரைவில் உரிய முடிவு எடுப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
- குடந்தை கருணா
13.10.2020
No comments:
Post a Comment