திண்டிவனம் மாவட்ட கழக சார்பில் ‘விடுதலை' சந்தா வழங்கும் நிகழ்ச்சி 29.10.2020 காலை 11 மணியளவில் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில் பெரியார் படிப்பகத்தில் நடந்தது. மண்டல தலைவர் க.மு. தாஸ், மாவட்ட தலைவர் மு. கந்தசாமி முன்னிலையில் மாவட்ட செயலாளர் பரந்தாமன் நோக்கவுரை ஆற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழா மற்றும் ‘விடுதலை' சந்தா சேர்க்கை பற்றி பொதுச்செயலாளர் சிறப்புரை ஆற்றினார். 40 ‘விடுதலை' சந்தா, 7 உண்மை சந்தா, 5 பெரியார் பிஞ்சு சந்தா அளிக்கப்பட்டது.
மண்டல தலைவர் க. மு. தாஸ் 10 விடுதலை, 1 உண்மை, 1 பெரியார் பிஞ்சு சந்தாவும், மாவட்டதலைவர் மு. கந்தசாமி 10 விடுதலை, 1 உண்மை, 1 பெரியார் பிஞ்சு சந்தாவும், மாவட்ட செயலாளர் பரந்தாமன் 3 விடுதலை சந்தா ப. க. தலைவர் அன்பழகன் 2 விடுதலை, மண்டல இளைஞரணி செயலாளர் பரிதி 8 விடுதலை, 5 உண்மை, 3 பெரியார் பிஞ்சு சந்தாவும் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செயலாளர் பச்சையப்பன் 5 விடுதலை சந்தாவும் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரகேரனிடம் வழங்கினர். நிறைவாக பரிதி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment