கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு பிப்ரவரிக்குள் இடைத்தேர்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 15, 2020

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு பிப்ரவரிக்குள் இடைத்தேர்தல்

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்


சென்னை,அக்.15,  தலைமை தேர் தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறிய தாவது:


கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் மறைவை தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானதாக அறி விக்கப்பட்டதில் இருந்து 6 மாதத் துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண் டும். அந்த வகையில் பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.


தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரை கரோனா பாதிப்பு தொடர்ந்தால், தற்போது பீகார் தேர்தலில் கடைப்பிடிக்கப்படும் பல்வேறு நடைமுறைகளை தமிழ கத்திலும் பின்பற்றுவது குறித்து அந்த நேரத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தேர்தல் நேரத் தில் கரோனா பாதிப்பு இருந்தால் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் வாக்கு வசதி செய்யப்படும். தேர்த லுக்கான ஆயத்தப் பணிகள், வாக்காளர் பட்டியல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்களுடன் அடுத்த வாரமும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி களுடன் நவம்பர் 3ஆம் தேதியும் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.


வரைவு வாக்காளர் பட் டியல் நவம்பர் 16ஆம் தேதி வெளியிடப்பட்டு, அதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment