கான்பூர், அக்.4 ஹத்ராஸ் பாலியல் சம்பவம் ஓய்வதற்கு முன்பாக அதே போன்று வேறொரு பாலியல் வன் கொடுமை படுகொலை சம்பவம் கான்பூர் அருகே நிகழ்ந்துள்ளது, தெரிய வந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி காணாமல் போன சிறுமியின், உடல் அங்குள்ள வயல்வெளியில் சிதைந்த நிலையில் காணப்பட்டது.
சிறுமியின் குடும்பத்தின் உறவி னர்கள் இருவரும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அந்த சிறுமி கொலை செய்யப் படுவதற்கு முன்பு பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டதாக அவ ரது பெற்றோர் குற்றம் சாட்டி யுள்ளனர்.
உடற்கூறு ஆய்விற்காக உடல் பாகங்களை அனுப்பியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறு மியின் தந்தைக்கும், அவர்களுக்கும் நில தகராறு இருப்பதாகவும், அவர்களை அச்சுறுத்திய 2 நபர்கள், மகளை கொலை செய்ததாகவும் கூறியுள்ளனர்.
நாங்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்று கான்பூர் தேஹத் காவல்துறை கண்காணிப்பாளர் சவுத்ரி தெரிவித் துள்ளார். ஹத்ராஸ் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே போன்று மேலும் ஒரு சம்பவம் உ.பி மாநிலத்தில் நடை பெற்றுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment