பஞ்சாப் மாநிலத்தில் 33 சதவிகிதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 16, 2020

பஞ்சாப் மாநிலத்தில் 33 சதவிகிதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு

 முதலமைச்சர் அறிவிப்பு


சண்டிகர்,அக்.16பஞ்சாப் மாநிலத்தில் அரசு வேலை களில் 33 சதவிகிதம் பெண் களுக்கு ஒதுக்கவேண்டும் என்பதுநீண்டநாள்கோரிக் கையாகும். 15.10.2020 அன்று அந்தகோரிக்கைநிறைவேற்றப் பட்டுள்ளதாகமுதலமைச்சர் அமரிந்தர்சிங்அறிவித்துள் ளார். அவரது தலைமையிலான அமைச்சர்கள்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள் ளது.


கூட்டத்தில்அரசுப்பதவி களுக்கு நேரடியாக ஆள் சேர்க்கை நடத்தும்போது, பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட் டுள்ளது. 2020 ஆம் ஆண்டு பஞ்சாப் சிவில் சர்விசஸ் விதி களுக்கு அமைச்சரவை ஒப் புதல் அளித்துள்ளது. இந்த விவரத்தை தமது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் அமரிந்தர் சிங்.


அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:


பஞ்சாப் பெண்களுக்கு இன்றுஒருவரலாற்றுநாள். ஏனெனில் எங்கள் அமைச்சர் கள் குழு, அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது நீண்ட தூரம் செல்லும் பயணமாகும். எங்கள் மகள்களை மேலும் மேம்படுத்துவதற்கும், மேலும் சமமான சமுதாயத்தை உரு வாக்கவும் உதவும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment