பா.ஜ.க. தலைவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
கவுகாத்தி, அக்.1 அசாம் மாநிலத்தில் காலியாக இருக்கும் 597 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. 66 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். ஆனால், தேர்வுக்கான கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதால், துவங்கிய சிறிதுநேரத்திலேயே 154 மய்யங்களிலும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
காவல்துறை விசாரணையில், பாஜக கிசான் மோர்ச்சா-வின் தேசிய நிர்வாக உறுப்பினராக இருக்கும் திபன் தேகா (DibanDeka), முன்னாள் காவல்துறை டிஅய்ஜி
பி.கே.தத்தா ஆகியோருக்கு தொடர்பிருப்பது அம்பலமானது. குட்டு வெளிப்பட்டதும் அவர்கள் தலை மறைவாகினர். இதையடுத்து, திபன் தேகா-வும், முன்னாள்டிஅய்ஜி பி.கே.தத்தாவும் தற்போது தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்
அவர்களைப்பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. பி.கே. தத்தாவின் வீடு மற்றும் விடுதிகளில் சோதனை நடத்திய காவல் துறையினர், அங்கிருந்து ஆட்சேர்ப்பு தேர்வு தொடர்பான ஆவணங்கள், 1.522 கிலோதங்கம் மற்றும் ஒரு கைத்துப் பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment