உத்தரபிரதேசம் மாநிலம், ஹத் ராஸ் என்ற பகுதியில் நான்கு உயர்ஜாதி யினரால் பாலியல் வன்கொடுமை செய் யப்பட்டு கொலை செய்யப்பட்ட 19 வயது தாழ்த்தப்பட்ட சமுக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் உடலை காவல்துறையினர் இரவோடு இரவாக எரித்துவிட்டனர்.
பலியான பெண்ணின் சகோதரர் கூறுகையில், “என் சகோதரி தகனம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது; காவல் துறை எங்களுக்கு எதுவும் சொல்ல வில்லை. நாங்கள் கடைசியாக ஒரு முறை அவளது உடலை வீட்டிற்கு கொண்டுவர அனுமதிக்குமாறு அவர் களிடம் கெஞ்சினோம். ஆனால், அவர் கள் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை” என்று தெரிவித்தார்.
வயலில் தனது தாய்க்கு உதவியாக வேலை செய்துகொண்டிருந்தபோது ஆதிக்க ஜாதி ஆண்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுக்கப்பட்டுள்ளது. மேலும் அவளது, முதுகெலும்பை உடைத்த கும்பல் கழுத்தையும் கம்பால் அடித் துள்ளனர். இதில் கழுத்து எழும்பும் சிதைந்தது. நான்கு உயர்ஜாதியினரும் சாவகாச மாக நடந்துவந்து ஊர்காரர்களிடம் அந்தப்பெண் சாலையில் கிடக்கிறாள் என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ள னர். இதனை அடுத்து அப்பெண் ணின் குடும்பத்தினர் அவரை காப் பாற்றி உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருந்து உயர் சிகிக்சைக்காக டில்லி கொண்டு சென்ற பிறகு அந்தப் பெண் 2 வாரங்களுக்குப் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இறந்தார். நள்ளிரவில், அவரது உடல் ஆம்புலன்சில் ஹத்ராஸில் உள்ள அவருடைய கிராமத்தை வந்தடைந்தது.
நள்ளிரவு 1 மணியளவில், கிராமத் தில் இருந்த பாதிக்கப்பட்ட பெண் ணின் சகோதரர்களில் ஒருவர் கூறுகை யில், “ஆம்புலன்ஸ் பிரதான சாலை யில் உள்ளது; உடலை வீட்டிற்குள் கொண்டு செல்ல காவல்துறையினர் எங்களை அனுமதிக்கவில்லை. அவர் கள் சுடுகாட்டு மைதானத்தில் விளக் குகளை எரியவிட்டு இப்போதே அவ ரது இறுதிச் சடங்குகளை செய்யும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். நள்ளிர வில் அவளைத் தகனம் செய்ய நாங்கள் விரும்பவில்லை; நாங்கள் அவளது உடலை வீட்டிற்கு எடுத்துச்செல்ல விரும்புகிறோம்” என்று கூறினார்.
அந்த நேரத்தில், தனது தந்தையும் சகோதரரும் டெல்லியில் இருந்து இன் னும் வீட்டிற்கு வரவில்லை என்று அவர் கூறினார். “என்ன அவசரம்? எங்கள் தந்தை இன்னும் வீட்டிற்கு வரவில்லை” என்று அவர் கூறினார்.
2 மணி நேரம் கழித்து, அந்த கிரா மத்திலிருந்து வெளியான வீடியோக் களும் புகைப்படங்களும் ஒரு பிணத்தை எரிக்கும் காட்சியைக் காட்டியது. தக னம் செய்யப்படும் இடத்திற்கு அரு கில் பெண்ணின் குடும்ப உறுப்பினர் கள் யாரும் இல்லை. அதிகாலை 3.30 மணியளவில், அவரது சகோதரர் கூறு கையில், “நாங்கள் எங்கள் சகோதரி யின் உடலைத் தகனம் செய்ய மறுத்த போது, காவல்துறையினர் எங்களை மிரட்டினர். எனது உறவினர்கள் காவல் துறை என்ன செய்கிறார்கள் என்று பார்க்க முயன்றபோது, அவர்கள் எங்களை உதைத்து, எங்கள் உறவி னரின் வளையல்களை உடைத்தனர். பயத்தால், நாங்கள் எங்களைப் பூட்டிக் கொண்டோம். அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்?” என்று கேள்வி எழுப் பினார்.
அங்கேயிருந்து வெளியான வீடியோக்கள் மூலம், மகளின் உடலை கடைசியாக வீட்டிற்கு கொண்டுவர அனுமதிக்குமாறு அந்த பெண்ணின் தாய் காவல்துறை அதிகாரிகளிடம் கெஞ்சியது தெரிகிறது.
இதனிடையே, ஹத்ராஸின் இணை மாஜிஸ்திரேட் பிரேம் பிரகாஷ் மீனா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறு கையில், “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டுள்ளன. குற்றம் செய்தவர்கள் நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்தப்படுவதை காவல் துறையும் நிர்வாகமும் உறுதி செய்யும்.” என்று கூறினார்.
நீதிமன்ற விசாரணை இல்லை. உடற்கூறு பரிசோதனை அறிக்கை இல்லை. குற்றவாளிகள் மீது பலமான முதல் தகவல் அறிக்கை இல்லை. இறந்த போன பெண் கொடுத்த வாக்கு மூலத்தில் கூட குற்றவாளிகளின் பெயரை சரியாக எழுதவில்லை. குற்ற வாளிகள் அனைவரும் சாமியார் முதல்வர் ஆதித்யநாத்தின் தூரத்து உறவினர்கள் இவர்கள் ஏற்கனவே இது போன்ற சில பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவர் கள் மீது அப்போதும் வழக்குப் பதியப் படவில்லை இப்போதும் வழக்கு பதியப்படவில்லை. உண்மையில் இவர்கள் அனைவரும் இதுவரை முறையாக கைதுசெய்யப்படவும் இல்லை. இக்கொடுமையைச் செய்த வர்கள் சாவகாசமாக ஊருக்கு வந்து தங்கள் செய்த குற்றத்தைச் செய்துள் ளதைக் கூறிச் சென்றுள்ளார்கள்.
இந்த ஆட்சியில் ஆசிபா முதல் இன்றைய மோனிஷா வரை கொடூர மாகக் கொலை செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றனர். பா.ஜ.க. அரசோ திரைப் பட நடிகையான கங்கனாரனாவத்திற்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்து வருகிறது.
No comments:
Post a Comment