சென்னை, அக். 24- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒவ் வொரு ஆண்டும் அக்டோபர் 3ஆ-வது வாரத்தில் தொடங் கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மய்யத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகம், ஆந்திர கடற் கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்ட லத்தின் கீழடுக்கில் வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து காற்று வீச தொடங்கக்கூடிய நிலையில் வடகிழக்கு பருவ மழையானது தமிழகம், புதுச் சேரி, தெற்கு ஆந்திரா, ராயல் சீமா, தெற்கு கர்நாடகா பகுதி களில் வருகிற 28-ஆம் தேதியை யொட்டி (புதன்கிழமை) தொடங்கக்கூடும்.
தற்போது மேற்கு திசை காற்றும், தாழ்வு மண்டலமும் இருக்கிறது. அது கடந்து கொண்டு வருகிறது. வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் அது நிறைவுபெற்றதும், 25, 26-ஆம் தேதிகளில் அதன் நிலைமாறி 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் காற்று வீசத்தொடங்கி மழை யும் தொடங்கும்.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில், பருவ மழை முன்னறிவிப்பாக தமி ழகத்தில் வடமாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், தென் மாவட்டங்களில் இயல்பை விட சற்று குறைவாகவும் மழை பதிவாகும் என்று கணிக்கப் பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment