உரத்தநாடு ஒன்றியம் மேலவன்னிப்பட்டில் 26.9.2020 அன்று நடைபெற்ற தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் விழா, சுயமரியாதைச் சுடரொளிகள் 20ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி ஒன்றிய கழக தலைவர் த.செகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ஆ.இலக்குமணன் ஒன்றிய கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தந்தை பெரியார் பிறந்தநாள் பரிசாக 25, ஆறு மாத விடுதலை சந்தா தொகை 22,500அய் முதல் தவணையாக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்களிடம் வழங்கினார். உடன்: கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில விவசாய அணி செயலாளர் இரா.கோபால், கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, உரத்தநாடு நகர செயலாளர் ரெ.இரஞ்சித்குமார், ஊராட்சி மன்றத் தலைவர் தினகரன், கீழ வன்னிப்பட்டு கிளைக் கழகத் தலைவர் செந்தில்குமார்.
Friday, October 2, 2020
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment