மீண்டும் வெளிவந்த தேசிய குற்றவியல் ஆவணம்: 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 4, 2020

மீண்டும் வெளிவந்த தேசிய குற்றவியல் ஆவணம்: 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர்


புதுடில்லி, அக். 4 இந்தியாவில் பெண் களுக்கு எதிரான வன்முறைகள் தொடர் கதையாகி வருகின்றன. அது வும் கூட்டு பாலியல் வன்கொடுமை வட இந்திய மாநிலங்களில் அடிக்கடி நிகழ்ந்து, ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் நடந்த கொடுமை, மத்தியப் பிரதேச மாநிலம் மருகாரில் நடந்த கொடுமை ஆகியன சமீபத்திய சான்றுகள். சட் டங்கள், நடவடிக்கைகள் கடுமையாக இருந்தாலும் அரசு நிர்வாகத்தினரால் குற்றங்களைத் தடுக்க முடியவில்லை. இந்த சூழலில் தேசிய குற்ற ஆவண காப்பகம் 2019 ஆம் ஆண்டு தொடர் பான அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளது.


இந்தியாவில் பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் 2018-இல் 3.78 லட்ச மாக இருந்தது. அதுவே 2019-இல் 4.05 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 7.3 சதவீத ஏற்றம் என்பது அதிர்ச்சி அளிப்பதாகும். இதில் 30.9 சதவீத குற்றங்கள் கணவர்களால் அல்லது உறவினர்களால் பெண் களுக்கு நிகழ்த்தப்படுகிறது. இதை யடுத்து குறிப்பிட்ட நோக்கத்துடன் பெண்களை தாக்குவது 21.8 சதவீத மாகவும், பணம் பறிப்பதற்காக கடத்துவது மற்றும் வன்முறைகளை நிகழ்த்துவதற்காக கடத்துவது என 17.9 சதவீத குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.


அதில் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் 7.9 சதவீதம் ஆகும். ஒட்டு மொத்தமாக பெண்களின் மக்கள் தொகை எண்ணிக்கையில் குற்றங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு 58.8 சதவீத மாக இருந்தது. அதுவே 2019இல் 62.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2019ஆம் ஆண்டு இந்தியாவில் ஒவ் வொரு நாளும் 88 பாலியல் வன் கொடுமைகள்  நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவிக்கிறது.


கடந்த ஆண்டு பதிவான 32,033 பாலியல் வன்கொடுமை சம்பவங் களில் 11 சதவீதம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் ஆவர். ராஜஸ்தான்(6,000) மற்றும் உத்தரப் பிரதேசத்தில்(3,065) தான் நாட்டி லேயே அதிகளவிலான பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள் ளன. கடந்த 10 ஆண்டுகளில் பெண் கள் மீதான வன்கொடுமை  சம்ப வங்கள் 44 சதவீதம் அதிகரித்திருக் கிறது.


இவையெல்லாம் வழக்குகளாக பதிவு செய்யப்பட்டதன் அடிப்படை யில் வெளிவந்துள்ள தகவல்கள் ஆகும். மறைக்கப்பட்ட, புதைக்கப் பட்ட சம்பவங்கள் இந்தியாவில் ஏராளம் இருக்கின்றன. பலரும் அச்சத்தால் உண்மையை வெளியே கூறாமல் மறைத்துவிடுகின்றனர்.


No comments:

Post a Comment