தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய வகுப்பினரின் பாதுகாப்புக்கான 20 திட்டங்கள் கேரள முதல்வர் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய வகுப்பினரின் பாதுகாப்புக்கான 20 திட்டங்கள் கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்


திருவனந்தபுரம், அக்.22 நாட்டின் பல பகுதிகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்டோரும் அச்சுறுத்தலையும் தாக்கு தலையும் எதிர்கொள்ளும் போது கேரளாவில் அரசு இந்த வகுப்பினருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்களையும்  செயல் படுத்தி வருவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில்: தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுத் துறைகளின் கீழ் 20 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். மாநிலபிற்பட்டோர் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ்,100 நாட்களில் 3060 வேலைகள் உருவாக்கப் பட்டன, ரூ.650 கோடி மதிப்புள்ள கடன்திட்டங்கள், காஞ்ஞாங்காடு, தலசேரி, மானந்தவாடி, காஞ்சிராப்பள்ளி, பத்தனாபுரம், அடூர் ஆகிய இடங்களில் புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டன. பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சுபிக்ஷா கேரளதிட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயத் துறைகடன்கள் போன்றவை உட்படுத்தப் பட்டுள்ளதாக கூறினார்.


கிறிஸ்தவ மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் கோட்டயத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மய்யம், கோவிட் பாதிக் கப்பட்ட 500 குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவிஆகியவை தொடங்கப்பட்டன. பட்டியல் ஜாதி மேம்பாட்டுத் துறையின் கீழ், இடுக்கிகோடாலிப்பாரயில் உள்ள போஸ்ட் மெட்ரிக் விடுதி, காசர்கோடு பெடடூக்காவில் ப்ரீ-மெட்ரிக் விடுதி, குட்டிகோல் ப்ரீ-மெட்ரிக் ஹாஸ்டல், இரிட்டி ஆரலம் பண்ணை தயாரிப்பு ஷோரூமான தணல் மினி சூப்பர்மார்க்கெட், கேரள மாநில பழங்குடி வரைபட (அட்லஸ்) வெளியீடு போன்றவை மற்றதிட்டங்களில் அடங்கும். பட்டியல் ஜாதி மேம்பாட்டுத் துறையின் கீழ் கோழிக்கோடு மருதோங்கரயில் கட்டப்பட்ட பி.ஆர்.அம்பேத்கர் அரசு மாதிரி தங்குமிடத்துடன் கூடிய மகளிர் பள்ளி,  பாலக்காடு மாவட்டம் கொழிஞ்ஞாம்பாறையில் போஸ்ட் மெட்ரிக் விடுதி ஆகியவற்றை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.ஆற்றிங்கல் தொகுதியில் உள்ள 18 பட்டியல் ஜாதி காலனிகளுக்கான திருவனந்தபுரம் தோனக்கல் மாதிரி குடியிருப்பு பள்ளியின் அடிக்கல் நாட்டும், குடிநீர் திட்டத்தின் அடிக்கல் நாட்டும்  நடைபெற்றது.


 


பில்லி சூனியம் எடுப்பதாக கூறி மோசடி செய்த  சாமியார்


பெரம்பூர், அக்.22 பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ஓட்டு னரிடம்  ரூ.2 லட்சம் மோசடி செய்த  சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் ராஜகுமாரன்(வயது 45). இவர், சொந்த மாக மினிவேன் வைத்து ஓட்டிவந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி பகுதியில் ஒரு சாமியாரிடம் ராஜகுமாரன் குறி கேட்டார். அப்போது அவர், “உனக்கு ஆகாத சிலர் உன் வீட்டில் பில்லி சூனியம் வைத்து உள்ளனர். இதனால் உனக்கு தொழிலில் நட்டம் ஏற்பட்டு வருவதுடன், உன் வீட்டில் உள்ள அனைவருக்கும் அடிக்கடி உடல்நலம் சரியில்லாத நிலை ஏற்பட்டு வருவதாக” குறி சொன்னார்.


அது உண்மைதான் என்று ராஜகுமாரன் கூறியதும், பில்லி சூனியத்தை எடுத்து, அதை சரிசெய்ய ரூ.2 லட்சம் செலவாகும். உடனே அதனை செய்யாவிட்டால் உயிர் பலி ஏற்படும் என பயமுறுத்தினார். சாமியார் கூறுவது உண்மை என நம்பிய ராஜகுமாரன், உயிர் பலி ஏற்பட்டு விடக்கூடாது என்ற பயத்தில், தான் சொந்தமாக வைத்து ஓட்டிவந்த மினிவேனை


ரூ.5 லட்சத்துக்கு விற்றார்.


பின்னர் சாமியார் கூறியதுபோல் ரூ.2 லட்சம் மற்றும்


2 கோழிகளுடன், தனது உறவினர் ஒருவரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார்.


பின்னர் சாமியாரை தொடர்பு கொண்டபோது அவர், வண்ணை நகர் ஸ்டான்லி மருத்துவமனை அருகே வரும்படி கூறினார். அதன்படி அங்கு சென்றனர். அங்கு வந்த சாமியார், இவர்களிடம் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் 2 கோழிகளை வாங்கிக்கொண்டு, “இங்கேயே நில்லுங்கள். நான் பூஜைக்கு தேவையான பொருட்களை அருகில் இருந்து வாங்கி வருகிறேன்” என கூறிச்சென்றார். ஆனால் அதன்பிறகு திரும்பி வரவில்லை. ஒருநாள் முழுவதும் காத்திருந்தும் பயன் இல்லை. பின்னர்தான் அவர் மோசடி சாமியார் என்பதும், தங்களிடம் ரூ.2 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்ததும் அவர்களுக்கு தெரிந்தது.


சொந்தமாக மினிவேன் வைத்து ஓட்டிவந்த டிரைவர், சாமியார் சொன்னதை நம்பி மினிவேனை விற்றதுடன், அதில் கிடைத்த ரூ.2 லட்சத்தையும் தென்காசியில் இருந்து சென் னைக்கு மோசடி சாமியாரை தேடிவந்து கொடுத்து ஏமாந்து போனார். இதுபற்றி வண்ணை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  சாமியாரை தேடி வருகின்றனர்.


 


கொடிய வறுமையில் தள்ளப்பட்ட 35.6 கோடி குழந்தைகள்


யுனிசெப் நிறுவனம்  தகவல்



நியூயார்க், அக்.22 கரோனா வுக்கு முன்னரே  உலகம் முழு வதும் 35.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடி வந்ததாக அய்.நா. குழந்தைகள் நல அமைப்பு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளன.


உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா தொற்று பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை கொண்டு வந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பட்டினி சாவு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.


இந்த கண்ணுக்குத்தெரியா நோய் பரவுவதற்கு முன்னே உலகம் முழுவதும் 35.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடி வந்ததாகவும், அதாவது 6 குழந்தைகளில் ஒருவர் இந்த அவலத்தில் இருந்ததாகவும், தற்போதைய பொருளாதார சிக்கலால் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்திருப்ப தாகவும் அய்.நா. குழந்தைகள் நல அமைப்பான யுனி செப்பும், உலக வங்கியும் அதிர்ச்சித்தகவல் வெளியிட்டுள்ளன.


இந்த வறுமையை ஒழிக்க பன்னாட்டு அளவில் நடவடிக் கைகளை எடுக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் எனவும் அவை எச்சரிக்கை விடுத்துள்ளனன


உலக அளவில் 6-இல் ஒரு குழந்தை கொடிய வறுமையில் இருக்கிறது என்றால், அது வாழ்வதற்கே போராட்டம் நடத்த வேண்டியிருப்பதாக யுனிசெப் திட்ட இயக்குனர் சஞ்சய் விஜேசேகரா கூறியுள்ளார். இந்த எண்ணிக்கை மட்டுமே யாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் எனக்கூறியுள்ள அவர், இந்த எண்ணிக்கை கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்னும் மோசமாகுவதற்கு முன்பே நாடுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.


இதைப்போல உலக அளவில் கொடிய வறுமையில் தள்ளப் பட்டு உள்ளவர்களில் 50 சதவீதம் பேர் குழந்தைகள் எனக் கூறியுள்ள உலக வங்கி நிர்வாகி கரோலினா சாஞ்சஸ், கரோனாவுக்கு முன்னரே இந்த எண்ணிக்கை அனை வருக்கும் கவலையை ஏற்படுத்தி இருந்தது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.


No comments:

Post a Comment