ஸ்டாக்ஹோம், அக். 7- உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்த வர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங் கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக் கப்படுகிறது.
2020ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோ மில் நேற்று (6.10.2020) அறிவிக்கப் பட்டது. ஹெபாடிடிஸ் சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததன் விளைவாக ஹார்வி ஜே. ஆல்டர், மைக்கேல் ஹவுடன் மற்றும் சார்லஸ் எம். ரைஸ் ஆகிய மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ரோஜர் பென் ரோஸ், ஜெர்மனியின் ரெய்ன்ஹார்ட் கென்சல் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டிரியா கெஸ் ஆகிய மூன்று பேருக்கு நோபல் பரிசு வழங் கப்படுகிறது. கருந்துளை உருவாக்கம் என்பது பொதுச் சார்பியல் கோட்பாட் டின் வலுவான முன்கணிப்பு என்பதை கண்டுபிடித்தற்காக ரோஜர் பென்ரோ சுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. விண் மீன் திரளில் உள்ள நெருக்கமான மற் றும் அதிக எடை கொண்ட விண் பொருள் குறித்த ஆராய்ச்சிக்காக மற்ற இருவருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment