செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 25, 2020

செய்தியும், சிந்தனையும்....!

சங்கராச்சாரியாரும் - சாய்பாபாக்களும்!
'நீண்ட நாள்களாக உடல்நலமின்றி வீட்டில் இருக்கிறேன். நலம் பெற என்ன செய்யவேண்டும்?' உஷ்ண பகவானான சூரியனை வணங்குவதாலும், ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வணங்குவதாலும் உடல்நலம் பெறலாம்: - ஓர் ஆன்மீக இதழ்.
இப்படி எழுதுபவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் இதனைத்தான் செய்கிறார்களா? மருத்துவமனைக்கோ, டாக்டர்களிடத்திலோ செல்லுவதில்லையா? சங்கராச்சாரியார்களும், சாய்பாபாக்களும் பார்க்காத வைத்தியமா? தவறான வழிகளைக் காட்டி மக்கள் உயிருடன் விளையாடுவது சட்டப்படி குற்றமே!
‘நீட்' யாருக்கு?
'நீட்' பயிற்சி மய்யங்கள் இந்தியாவில்  2021 இருக்கின்றன. இவற்றின் வருவாய் ரூ.81,704 கோடி என்று கூறப்படுகிறது.
கார்ப்பரேட்டுகளும், பார்ப்பனர்களும் பயன்படவும், ஒடுக்கப்பட்ட மக்களையும், ஏழை எளியவர்களையும் மருத்துவக் கல்வி பக்கம் தலைகாட்டாமல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டதுதானே 'நீட்!'
‘இதெல்லாம் சகஜமப்பா!'
தேசிய பல்கலைக் கழக சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் மதிப்பெண் குளறுபடி, விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்யும்போதெல்லாம் மதிப்பெண்கள் மாறி மாறி வந்ததையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியவர்கள் மீதான நடவடிக்கை என்ன?
கேட்டால், இதெல்லாம் சகஜமப்பா என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.
உதிக்கட்டும் உதயசூரியன்
தி.மு.க. ஆட்சி உதயமானதும் 'நீட் தேர்வு சட்டப்படி ரத்து: - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
ஒடுக்கப்பட்ட மக்களின், கிராமப்புற மக்களின் வயிற்றில் பால் வார்க்கும் செய்தி.
‘கன்னித்தீவு' கதை நிலையில் உள்ளதா?
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை - நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 3 மாதம் அவகாசம்.
'தினத்தந்தி'யின் 'கன்னித்தீவு' கதைதான் நினைவிற்கு வருகிறது. 'கமிஷன்' என்று ஏன்தான் பெயர் வைத்தார்களோ!
இப்படியா...?
தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 5 லட்சம் தீபம் ஏற்றப்படும்..
இப்படியா மக்களை மத விவகாரங்களில் திருப்பி ஏமாற்றுவது?
பொருளாதாரத்தால் மக்களின் வாழ்வாதாரம் பறிபோனதைப்பற்றி மக்களை யோசிக்க விடாமல் ஏமாற்றும் ஜிகினா வேலையில் மக்கள் எத்தனைக் காலம் ஏமாறுவார்கள்? அவர்களுக்கும் வயிறு உண்டே - அது பசியும் எடுக்கும் - நினைவிருக்கட்டும்! 
குற்றவாளி யார்?
பெண்களை இழிவுபடுத்தியதாகக் குற்றச்சாட்டு. திருமாவளவன்மீது பா.ஜ.க. மகளிர் அணியினரும், காவல் நிலையத்தில் புகார்.
பெண்களை இழிவுபடுத்தியது மனுதர்மமா? திருமாவளவனா? ஒரு குலத்துக்கொரு நீதி என்னும் மனுதர்ம விடயத்தில் என்னதான் நடக்குது?


No comments:

Post a Comment