ஆச்சாரியார் கொண்டு வந்த 1939ஆம் வருட ஆலய நுழைவுச் சட்டம் என்பது என்ன?
கோவிலில் தாழ்த்தப்பட்டோரும், வேறு சில ஜாதியினரும் நுழைவது குற்றமாக இருந்த காலகட்டத்தில், அப்படி நுழைந்தோரையும், நுழையத் தூண்டியோரையும் அரசு பாதுகாக்கும் என்பதுதான் 1939ஆம் வருட Madras Temple Entry Authorization and Indemnity Act.
'உங்களுக்குத்தான் அரசில் பெரும்பான்மை இருக்கிறதே, கோயிலில் எல்லோரும் நுழையலாம் என்று சட்டம் கொண்டுவராமல், நீங்கள் விரும்பியவர்கள் நுழையலாம்; அவர்களைப் பாதுகாப்பேன் என்று சட்டம் கொண்டுவருகிறீர்களே' என்பதுதான் முதல் அமைச்சர் ஆச்சாரியாரை நோக்கி பெரியாரின் கேள்வி.
1947ல்தான் எல்லா ஜாதியினரும் கோவிலுக்குள் நுழைவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. The Tamil Nadu Temple Entry Authorization Act என்பது இந்தச் சட்டத்தின் பெயர்.
ஏற்கனவே 1939இல் சட்டம் சரியாக இயற்றப்பட் டிருந்தால், புதிதாக ஏன் 1947இல் சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் ஏன் எழ வேண்டும்?
1947ஆம் வருடச் சட்டத்தின் துவக்கத்தைப் படித் தாலே 1939ஆம் வருட சட்டத்தின் போதாமை புரியும்.
No comments:
Post a Comment