மதுரை காலேஜ் ஹைஸ் கூலை எடுத்துக் கொள் வோம். அந்தப் பள்ளிக்கூடம் வெகு காலமாகவே இருந்து வருகிறது. அதற்கு சட்டசபை மெம்பரும், பொதுவாழ்வில் வெகுகாலம் ஈடுபட்டிருக்கிற வரும், இன்று மதுரை சேர்மென்னாய் இருப்ப வரும், வகுப்புவாரிப் பிரதி நிதித்துவக் கொள்கையை அடியோடு எதிர்ப்பவரு மான தோழர் கே.ஆர். வெங்கட் ராமய்யர் செக்ரட் டரியாவார்.
இவர் ஆதிக்கத்திலுள்ள அப்பள்ளிக்கூடத்தின் போர்டு மெம்பர்கள் 40 பேர் களில் ராஜா சர்.அண்ணா மலை, சேத்தூர் ஜமீன்தார் இருவர் தவிர, மற்ற 37 மெம் பர்களும் அய்யர், அய்யங் கார், ஆச்சாரி, சாஸ்திரி ஆகியவர்களே ஆவார்கள். நிர்வாக சபை மெம்பர்களோ 10 பேர்களில் 10 பேரும் அய்யர், அய்யங்கார், ஆச் சாரி ஆகியவர்களே ஆவார் கள்.
உபாத்தியாயர்களும் 46 பேர்களில், தமிழ்ப்பண்டிதர் திருமலைச்சாமி முதலியார், உருது பண்டிதர் சையத் குலாம் சாய்பு ஆகிய இருவர் போக பாக்கி 44 பேர்களும் அய்யர், அய்யங்கார், சாஸ் திரி, ஆச்சாரியார், ராவ்ஜி ஆகிய பார்ப்பனர்களேயா கும். 3 எட்மாஸ்டர்களும் பார்ப்பனர்கள்
குமாஸ்தாக்கள் லைப்ரே ரியன் ஆகிய மூன்று உத்தி யோகஸ்தர்களும் பார்ப்பனர் களே. பார்ப்பனரல்லாத ஆர் டினரி போர்டு மெம்பர்கள் 2, 3 பேர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களிடம் இந்தப் பார்ப்பனர்கள் எவ் வளவு பணம் கவர்ந்து கொண்டு இந்த ஜாப்தாவில் பெயரளவுக்கு மாத்திரம் ஊமை மெம்பராய்ச் சேர்த் திருப்பார்கள் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டிய தில்லை.
ஆகவே, பார்ப்பனர்கள் நிர்வாகத்தில் உள்ள ஸ்தாப னங்களும், அதிகாரங்களும் கடுகளவாவது பார்ப்பனரல் லாதார் என்கின்ற ஒரு சமுகம் இருக்கிறதாகவாவது அல்லது அவர்களும் நம்ம சமுகம் போல படித்துவிட்டு பார்த்திருக்கிறார்களே என் றாவது, பார்ப்பனரல்லாதார் பிள்ளைகளாலும், பெற்றோர் களாலும் சர்க்காராலும் கொடுக்கப்படுகின்ற பணத் தைக் கொண்டுதானே இந்தப் பள்ளிக்கூடம் நடந்து வருகின்றது என்றாவது உள்ள எண்ணம் கடுகள வாவது இந்த பார்ப்பனக் கூட்டத்தில் யாராவது ஒரு வருக்கு இருந்து வருகிறதா? என்று யோசித்துப் பார்க் கும்படி வேண்டுகின்றோம்.
‘குடிஅரசு' தலையங்கம், 2.6.1935
85 ஆண்டுகளுக்குமுன் இதுதான் தமிழ்நாட்டின் நிலை. இப்போது ஏற்பட் டுள்ள மாற்றங்களுக்குக் காரணம் திராவிடர் இயக் கம்தானே!
- மயிலாடன்
No comments:
Post a Comment