தமிழக அரசின் 162 ஆவது பிரிவுப்படி அரசு ஆணை: வரவேற்கத்தக்க ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 30, 2020

தமிழக அரசின் 162 ஆவது பிரிவுப்படி அரசு ஆணை: வரவேற்கத்தக்க ஏற்பாடு

திராவிடர் கழகத் தலைவர்  கருத்து


தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிய, தமிழ்நாட்டு மருத்துவக் கல்வி இடங்களில் 7.5 சதவிகிதம் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்ற உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் சுமார் இரண்டு மாதங்களாக இழுத்தடிப்பதோடு, மேலும் சில வாரங்கள் ஆகலாம் என்று இவ்வாண்டு கலந்தாய்வு தொடங்கவேண்டிய காலகட்டத்திலும் ஆளுநர் கூறிய நிலையில், தமிழ்நாட்டின் அத்துணை கட்சிகளும், தலைவர்களும் வற்புறுத்தியும், அதற்கு மதிப்பளிக்கத் தவறிய நிலையில், தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 162 ஆவது பிரிவினைப் பயன்படுத்தி, தனது செயற்பாட்டினை ஒரு அரசு ஆணையாகவே போட்டு அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கதாகும். மருத்துவ மாணவர்கள் தேர்வுமூலம் ஒரு கதவு திறக்கப்படுகிறது.


தமிழக அரசின் கொள்கை முடிவு (Policy Decision) ஆகவும் அமைவதால், இது தற்போதைய சூழ்நிலையில் உள்ள ஒரே வழி!


தமிழக அரசின் இந்த ஆணை முடிவை வரவேற்கிறோம்!


மாநில அரசின் இந்த உரிமை உணர்வு தொடரட்டும்!


 


கி.வீரமணி 


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


29.10.2020


No comments:

Post a Comment