நியூயார்க், அக்.2 அமெரிக்காவைச் சேர்ந்த ‘பெக்டன் டிக்கின்சன் அண்ட் கோ’ நிறுவனம், மருத் துவக் கருவிகளை உற்பத்திய செய்து விநியோகித்து வரு கிறது. இந்நிறுவனம் புதிய கருவி மூலம் 15 நிமிடங்களில் கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த பரிசோதனைக்கு அய்ரோப்பிய நாடுகள் அனுமதி அளித்துள்ளன என்று பெக்டன் டிக்கின்சன் நிறுவன நிர்வாகிகள் நேற்று தெரிவித்தனர். இந்த முறையான பிசிஆர் பரிசோதனையை விட சிறப்பானது.
இதற்கான கருவி ‘பிடி வெரிட்டார் பிளஸ் சிஸ்டம்’ செல்போன் அளவில் உள்ளது. இந்தக் கருவி இந்த மாத இறுதியில் அய்ரோப்பிய நாடுகளில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment