அபாயகரமான சமூகப் பழக்கவழக்கங் களை மாற்ற அய்க்கிய நாடுகள் புதிய திட் டத்தை வகுத்துள்ளது.
ஜாம்பியாவின் கிழக்கு மாகாணத்தின் மிகப் பெரிய முக்கிய தலைவர்களில் ஒருவர் குழந்தைத் திருமணம், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் செய்ப வர்களுக்கு எவ்வித தண்டனையும் வழங் காதது உள்ளிட்ட பல மோசமான செயல் பாடுகளை விளைவிக்கும் சமூக விதிமுறை களை எதிர்த்து நிற்பதாக பெண்கள் சுகா தார நிறுவனமான யுஎன் எஃப் பி ஏ (UNFPA) தெரிவித்துள்ளது.
ஒரு பெண் தலைவராக, எனது தலை மைக்குள் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். எங் கள் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாதிக் கும் சமூக மற்றும் பாரம்பரிய விதிமுறை களையும் நடைமுறைகளையும் நாங்கள் எதிர்த்து நிற்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன் ”என்று செவா மக்களின் தலைவரான கவாசா கூறினார்.
சுமார் 100,000 மக்களுடன் 650 க்கும் மேற்பட்ட கிராமங்களை வழிநடத்திய இவர், கிழக்கு மாகாணம் முழுவதிலும் உள்ள பல பாரம்பரிய மற்றும் சமூகத் தலை வர்களில் ஒருவர், இந்த அச்சமூகத்தில் நிக ழும் ஆபத்தான நடைமுறைகளை எதிர்த்து நிற்கிறார்.
"பல சிறுமிகள் குழந்தைப் பருவத்தி லேயே சடங்குகளுக்கு உட்படுத்தப்படுவ தற்காக பள்ளியை விட்டு வெளியேற நிர் பந்திக்கப்படுகிறார்கள். இதில் பெரும்பா லும் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த தவறான தகவல்கள் அடங்கும்" என்று குறிப்பிட்டார். சில சந் தர்ப்பங்களில், எச்.அய்.வி உள்ளிட்ட பாலியல் பரவும் நோய்த்தொற்றுகளுக்கும், எதிர்பாராத கர்ப்பத்திற்கும் வழிவகுக்கும் பாலியல் செயல்பாடுகளைச் செய்ய இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
ஜாம்பியாவில் மட்டுமல்ல, அப்பகுதி யைச் சுற்றியுள்ள பல்வேறு குழுக்களி டையே மாற்றத்தை கொண்டுவரவேண்டும். இதேபோன்ற முயற்சிகள் உலகெங்கிலும் உள்ள மூடநம்பிக்கை மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கம் என்ற பெயரில் நடக்கும் நடைமுறைகளை மாற்ற உதவுகின்றன.
சமூக நெறிமுறைகளை மாற்றுவது, பாலின சமத்துவத்தை அடைவதில் முக்கியமானது. உலகின் பல்வேறு பகுதிகளில் தீங்கு விளைவிக்கும் பழக்க வழக்கங்களை முடிவுக்கு கொண்டுவரு வதற்கு இந்த அணுகுமுறை வெற்றிகரமாக உதவும்.
பாலின சமத்துவத்தை அடைய அனைத்து, வகையான பாரபட்சமான விதிமுறைகளை யும் மாற்றுவதற்கான பொதுவான நடவடிக் கைகளையும் இது எடுத்துக் காட்டுகிறது.
இப்புதிய முயற்சிக்குத் தலைமை தாங்கிய UNFPA இன் பாலினம் மற்றும் மனித உரிமைகளின் தலைவர் நபிசாடோ டியோப், "மாறுபட்ட சக்திகள் மற்றும் கருத் துகள் மற்றும் நிலைகள் எதிர்கொள்ளப்பட வேண்டும், அந்த விவாதத்தில் ஒன்றாக வர வேண்டும்." என்று கூறியது முக்கியமானது ஆகும். முக்கியமாக வல்லுநர்கள் கூறுகை யில், சமூக உறுப்பினர்கள் தங்கள் நடை முறைகள் தங்கள் ஆழ்ந்த மதிப்புகளுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இது மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
இதற்கான முதல் படிகள்-தீங்கு விளை விக்கும் நெறியை அடையாளம் காணுதல், முக்கிய நபர்களின் ஊக்குவிப்பைத் தடை செய்தல் சமூகத்திற்குள் பாதிப்பு மற்றும் இழப்புகளைப் பரிமாற்றிக்கொள்ளுதல், மாற்றங்களினால் ஏற்படும் நன்மைகளைப் புரியவைத்தல், இவற்றை நாம் இயல்பாக அவர்களுக்கு எடுத்துச்சொல்லி அவர் களை பரப்புரைக்குப் பயன்படுத்துதல் போன்றவை ஆகும்.
No comments:
Post a Comment