எந்த தேசீயத்திலுமே மக்களுக்கு கல்வி கற்பிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் எல்லோரும் கல்வி போதிக்கும் விஷயத்தில் ஒருவிதமான உள் கருத்தை வைத்துதான் அதை கல்வியின் மூலம் போதிக்கும் முயற்சியில் இருந்து வரு கின்றார்கள். அந்த மாதிரியான உள் கருத்தை போதிப்பதில் கல்வியானது மக்களுக்கு அறிவுக்கும் வாழ்க்கையில் சுதந்திர மாய் வாழ்வதற்கும் பயன்படுகின்றது என்கின்ற கொள்கையை விட தாங்கள் கொண்ட உள் எண்ணத்தையே மிகமுக்கியமாய் கருதுகின்றார்கள். உதாரணமாக ஒரு தேசத்தார் தேசபக்திக்கு ஏற்ற கல்வி இருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். மற் றொரு தேசத்தார் மத பக்திக்கு ஏற்றதான கல்வி வேண்டு மென்று கருதுகிறார்கள். மற்றொருவர் வீரம் ஏற்படவேண்டு மென்று கருதுகிறார்கள். இன்னொருவர், அந்த நாட்டு பழமையான பழக்க வழக்கம் ஏதோ ஏற்படுவதற்குத் தகுந்ததா யிருக்கவேண்டுமென்று கருதுகின்றார்கள். மற்றும் சிலர் கடவுள் பக்தி புகட்டுவதற்கு அனுகூலமாய் பார்க்கின்றார்கள். இப்படியாகவே பல உட்கருத்துகளை பிரமாதமாய் கருதி கல்வி முறை ஏற்படுத்துவதில் கல்வியின் உண்மையான பிரயோஜனம் ஏற்படத்தான் முடியுமா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 27.9.1931
‘மணியோசை’
No comments:
Post a Comment