முந்திய சகாப்தத்திற்கும் பிந்திய சகாப்தத்திற்கும் கல்வி கற்பிப்பதில் எவ்வளவோ வித்தியாசங்கள் உண்டு. முதலாவது நம் சகாப்தத்திற்கு முந்திய காலத்தில் இன்ன இன்னார் தான் கல்வி கற்பிக்க உரிமையுடைவர்கள் என்கின்ற நிபந்தனை இருந்தது. இன்ன இன்ன விஷயந்தான் கற்பிக்கப்படலாம் என்கின்ற நிபந்தனையும் இருந்தது. இதோடு மாத்திரமல்லாமல் இன்ன இன்னார்தான் கல்வி கற்பிக்கப்பட உரிமையுடைய வர்கள் என்கின்ற நிபந்தனையும், இன்ன இன்னவர்களுக்கு எழுத்துவாசனையே கற்பிக்கப் படக்கூடாது என்கின்றதான நிர்ப்பந்தமும் இருந்து வந்தது. இந்த மாதிரியான நியமங் களினாலும், நிர்ப்பந்தங்களினாலும் கல்வி என்பது “மூடுமந்தி ரம்” போன்று ஒரு ரகசியப் பொருளாகவே இருந்து வந்தது என்பதன்றி அனைவருக்கும் பொதுவானதாய் இருந்ததென்று சொல்ல முடியுமா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 27.9.1931
‘மணியோசை’
No comments:
Post a Comment