தன்னைச் சீர்திருத்தக்காரன் என்று சொல்லிக் கொள்ளுகின்ற வர்கள் தங்கள் அறிவால் பிரதிட்சயக் கண்களால் அலசிப் பார்க்க உரிமையும், தைரியமும் உடையவர்களாக இருக்கவேண்டும். அதைவிட்டு விட்டு 'மற்றதெல்லாம் சரி' ஆனால் 'மதத்தைப் பற்றி பேசலாமா? கடவுளைப்பற்றி பேசலாமா? தேசியத்தைப்பற்றி பேசலாமா? புராணங்களைப்பற்றி பேசலாமா? மகான்களைப்பற்றி பேசலாமா? மகான்கள் அபிப்பிராயத்தைப்பற்றி பேசலாமா? நமக்கு அவ்வளவு யோக்கியதை உண்டா' என்பது போன்ற பிடி வாதகுணங்களும், தன்னம் பிக்கையற்ற குணங்களும், 'ஆனால்' களும் உடைய வர்களால் ஒரு நாளும் எவ்வித சீர்திருத்தமும் கைகூடாது. ஆதலால் சீர்திருத்தக்காரருக்கு உரமும், தனது அறிவில் நம்பிக்கையும், பரீட்சிக்கும் தாராள தன்மையும் வேண்டும். இது சமயம் உலகமெல்லாம் சீர்திருத்த மடைந்துவிட்டது. நாம் மாத்திரம் யாரைத் தொடலாம்? யார் வீட்டில் சாப்பிடலாம்? எதைச் சாப்பிடலாம்? என்பது போன்றவைகளில் இப்பொழுது, இந்த இருபதாவது நூற்றாண்டில் கவனித்து வருகின்றோம் என்றால் சீர்திருத்தம் ஏற்படுவது எப்படி?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 9.8.1931
‘மணியோசை’
No comments:
Post a Comment